104
அப்பாத்துரையம் - 25
"கோபப்படாதேயுங்கள், ஐயா! நான் கேட்டுத் தானே தெரிந்துகொள்ளவேண்டும்" என்று பணிவுடன் பேசினான்
ஹரிஹரன்.
மேலும் "பூட்டுக்களைச் சுமந்து செல்லச் சுமையாள் வைக்கக் குழாத்தினர் உதவுவரா” என்று ஹரிஹரன் கேட்டான். பெருமைதங்கிய ஆராம் கடைப்பூட்டுப் பேராள் அவனை ஏற இறங்கப்பார்த்து “உனக்கு நூற்றுக்கு 25 விழுக்காடு தரு கிறோமே எதற்காக? விற்பனை தெரிந்தவனானால் இதெல்லாம் நீ கேட்பாயா?" என்றான்.
இதுவரைப் படியாத பணிவுப்பாடத்தை இவ்வர்த்தகத் துறையில் ஹரிஹரன் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
கூலிக்கு ஒரு சுமையாளை மதிப்பாக அமர்த்திக் கொண்டு ஹரிஹரன் ஊர் ஊராய்ச் சுற்றினான். ஆராம் கடைப்பூட்டுக் களின் புகழைப் பேராளும் வெட்கப்படும் படி பாடினான். அதனைத்திறக்கும் பொறிகளையும் பூட்டும் பொறிகளையும் இயக்கிக்காட்டினான். அவன் மன மகிழும்படி ஊர்மக்கள் பேரானந்தத்துடன் வெண்கலக் கடையில் பெண்கள் கூடுவது போல் கூடி வேடிக்கை பார்த்து வியந்தனர். பலர் பல கேள்விகளையும் ஐயங்களையும் கேட்டனர். பேராளைப் போலின்றி அவன் பொறுமையுடன் விடையளித்தான். இதனால் அவனுக்கு எளிதில் பொழுது போயிற்றேயன்றி ஒரு காசும் வரவில்லை. ஏனெனில் பேர்போன ஆராம்கடைப்பூட்டைப் பார்க்க மக்கள் விரும்பினரேயன்றி வாங்கத் துணியவில்லை.
இங்ஙனம் ஒரு மாதம் சென்றது. எதுவும் விற்றால் தானே கழிவூதியம் கிடைக்கும். ஆனால் சம்பளமாவது கிடைக்கு மென்று அவன் போராளைத் தேடினான். போராளிருந்த இடத்தில் “அவன் போய்க்கிட்டத்தட்ட ஒரு மாதமாயிற்” றென்றனர். அவனைத்தேடிப் பலவர்த்தகர்களைக் கேட்டுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பேராளைப் பற்றி எல்லாச் செய்திகளையும் விடாது விசாரித்தபின் “குழாத்தின் பூட்டுக்கள் உன்னிடம் இருக்கின்றனவா” என்று கேட்டான். ஹரிஹரன் “ஆம்” என்று கூறவே வர்த்தகன் “நான் அவனைப்பார்க்கட்டும்”
66