காதல் மயக்கம்
107
வ்
வீடு நாடிவந்து தன் காதல் துணைவி பத்மாவுடன் இத்தனை கதையும் கூறினான். அவள் இவற்றைக் கேட்டுச் சிரித்த சிரிப்பு உண்மையில் அவனுக்கு ஆறுதலாயிருந்தது. ஏனெனில், இவ் வோரிடத்திலாவது அவமதிப்பும் வஞ்சகமுமில்லை. 'இத்தனை தோல்விகளுக்கிடையில் இளமையிலேயே மணம் செய்து ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன். என் செய்வது? என்று அவன் கவலையுடன் கூறினான்.
'இத்தனையிடையிலும் உங்கள் மனச்சான்று குறைகூற வேண்டாத செயல் இது ஒன்று உண்டு என்று காட்ட து வேண்டிய பொறுப்பு என்னுடையது. இன்னும் ஒருநாள் இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் மறந்திருப்போம். அதன்பின் வழி ஏற்படும்' என்றாள் பத்மா.
ஹரிஹரனுக்குப் பத்மாவின் உறுதி ஒரு பலம் தந்தது. அவள் அன்பணைப்பு மீட்டும் உலகை மறந்து புத்திளமை தந்தது. ஒருவனாயிருந்து பட்ட தோல்வியிடையே இனி இருவரா யிருப்பது ஒரு ஆறுதல்தான் என்று ஹரிஹரன் பத்மாவை நோக்கிக் கூறினான். அவள் கோணிய பார்வையுடன், “இருவ ரல்ல, மூவர் இருக்கிறோம்' என்றாள். அவள் கருவுற்றிருந்தாள் என்பது அவனுக்கு அப்போதுதான் விளங்கிற்று. தன் பொறுப்பு இன்னும் பெரிதாவதையே அது குறித்தாலும் அவனால் மகிழாமல் இருக்க முடியவில்லை.
பத்மா குறிப்பிட்ட ஒரு நாள் கழிந்தது. ஹரிஹரன் “நான் மீண்டும் வேலை தேடச் செல்ல வேண்டாமா?” என்று கேட்டான்.
பத்மா: நீங்கள் வேலை தேடப் போகிறீர்களா? தோல்வி தேடப் போகிறீர்களா?
ஹரி: வேலைதேடத்தான் போகிறேன். தோல்வி வெற்றிக்குப் படி என்பதை நீ கேட்டதில்லையா?
பத்மா: கேட்டதுண்டு. ஆனால் நீங்கள் அப்படிப் பினையை அறிந்ததாகக் காணவில்லையே?
ஹரி: ஏன்?