உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 25

116 ||_ பகலும் உழைத்தாலும் ஆண்டுக்கு நூறு ரூபாய்க்குமேல் ஈட்ட முடியாது இன்னும் ஒரு இருபது ஆண்டு நீ வாழ்வதாக வைத்துக் கொள்வோம். ஆதிரங்கன் திருடிய நூறாயிரத்தில் முதலின் ஒரு சிறு பகுதி கூட அதனால் அடைபடாதே. அதற்குமேல் அதன் வட்டி வேறாகிறது.

விசய: என் வாழ்நாளும் செல்வமும் எல்லாம் கொடுத்து என் உள்ளத்தையும் இறைவனடியில் செலுத்துவேன். என் கடனடைபடாமலே அவர் என்னை ஆட்கொள்வார்.

குருக்கள்: “ஆகா... குருக்களை விட்டுவிட்டுக் கடவுளிடம் நேரடியாகப் பேரமா? ஆகட்டும். அக்கடவுள் செய்வதைப் பார்க்கிறேன்” என்று கேலியும் கோபமும் கலந்த தொனியில் கூறினார்.

விசய: கடவுளின் எல்லையற்ற கருணையொன்றையே நான் நம்பியிருக்கிறேன். அவர் ஒருவரே என் அடைக்கலமும் பாதுகாப்பும். அவர் என்னைக் கட்டாயம் மன்னித்தருளுவார்.

குருக்கள்: நான் குருக்களாயிருக்கிறவரை கடவுள் மன்னிக்கமாட்டார். இது நினைவிருக்கட்டும்.

விசய: கடவுளுக்கு அடுத்தபடி பெரியவராகிய நீங்கள் அப்படிச் சொல்லலாமா? உங்களுக்கு நான் அவ்வளவு பகை மைக்கு என்ன செய்தேன், அல்லது யாருக்கு என்ன செய்தேன்?

குருக்கள்: நீ நேர்மையான அரசன் என்றே கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கும் நீ எவ்வகைக் கெடுதலும் செய்ய வில்லை. ஆனால் உன் முன்னோர் பழிக்காக நீயும் உன் பின்னோர்களும் அழியவேண்டும். இது என் விருப்பம்.

விசய: எனக்கு முன்னாலிருந்த இரண்டு அரசர்களும் அவர்கள் பிள்ளைகளும் நானும் அழிந்தால்போதாதா? முன்னோர் பழிக்காக ஒன்றுமறியாப் பின்னோர் பழி ஏற்க வேண்டுமா?

குருக்கள்: வேண்டும், முன்னோர் பழியால் வந்த செல் வத்தை நுகரக்கூடுமானால், பழியின் பயனை ஏன் நுகரக் கூடாது.