காதல் மயக்கம்
135
ஒருவர் இடைமறித்தார். "வெற்றி மார்க்கம் என்பது ஒரு தனிக் கலை ஐயா, தனிக்கலை! வெற்றி என்பது திறமையாலும் அல்ல, பிறப்பாலும் அல்ல. அது தோல்விகளிலிருந்து படிப்படியாக ஏற்பட்ட படிப்பினைகள் காரணமாக வருவது. ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு படிப்பினை உண்டு. அதைக்கண்டு மேல் முயற்சி செய்பவர்களுக்கே வெற்றி வரும். 'மாலை' யின் வாழ்க்கை வரலாற்றைக் கவனித்தவர்களுக்கு இச்செய்தி விளங்கும்" என்றார் அவர்.
பொழுது போக்காகப் பேசிக்கொண்டிருந்த அனைவ ரிடையேயும் எதிர்பாரா ஓர் உணர்ச்சி தென்பட்டது. பலர் ஒரு முகமாக அவரைப் பார்த்து அது என்ன கதை ஐயா, சொல்லுங்கள் கேட்போம்' என்றார்கள்.
கிழவர் கனைத்துக்கொண்டு கதை தொடங்கி விட்டார்.
மாலை என்பவன் பதினெட்டு வயதுவரை ஒன்றுக்கு முதவாத பேர்வழி. அவனிடம் சல்லிக்காசுகூடக் கிடையாது. அவனுக்கு எந்தத் தொழிலும் தெரியாது. ஏமாற்ற, திருடக் கூடத் தெரியாது. அவனுக்கு உதவிசெய்யத் தாய் தந்தையரோ அண்ணன் தம்பி உறவினர் முதலிய எவருமோ கிடையாது. இத்தனைக் கிடையில் அவன் பெருத்த சோம்பேறி கூட. உழைத்து வேலை செய்வ தென்பதை அவன் கனவிலும் எண்ணாதவன்.
(இதுவரையிலும் கவனியாதவர் கூட இப்போது கவனிக்கத்
தொடங்கினர்)
திருடுவதா, கொள்ளையடிப்பதா? இந்த இரண்டு வழிகள் தான் அவனுக்குத் தென்பட்டன. 'திருடத்திறமை வேண்டும். கொள்ளை யடிக்கப் பலம்வேண்டும்; ஆனால் சிறு வழிப்பறிக்கு இரண்டும் வேண்டாம்' என்ற எண்ணினான்.
அவன் முதல் முதல் திருட்டைக் கேட்டால் எவரும் சிரிப்பார்கள். ஆனால் அவன் அனுபவமற்ற மூளையின் முதல் முயற்சி அது. அவன் எங்கும் செல்லாமல் தன் வீட்டுத்திண்ணையி லேயே உட்கார்ந்து கொண்டான். போகிறவர்கள் வருகிறவர் களைக் கவனித்துக்கொண்டிருந்தான். ஒருவர் கனமான ஒரு தோல்பெட்டியுடன் அசைந்தாடி அவ்வழிவந்தார். அவர்