உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. வெற்றிக்கு மார்க்கம் யாது?

'உலகில் அடிக்கடி திறமை மிக்கவன் தோல்வியடை கிறான். ஒன்றுக்குமுதவாத சோம்பன் வெற்றியைக் கைப்பற்றி விடுகிறான். இதிலெல்லாம் திறமையின் பலன் ஒன்றுமில்லை. எல்லாம் யோகம், குருட்டு யோகம், அவ்வளவுதான் என்றார் ஒரு பெரியார்.

விருந்துண்டு, வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு விருந்து மண்டபத்தில் வந்திருந்த விருந்தாளிகளிடையே எப்படியோ இதுபற்றிப் பேச்சு எழுந்தது.

உடனே நடுத்தர வயதுடைய ஒருவர் சற்று நிமிர்ந்து "அதெல்லாம் இல்லை. திறமையும் சூழ்நிலையும் சேர்ந்து தான் வெற்றியை நிர்ணயிக்கமுடியும். குருட்டு யோகமே கிடையாது. திறமையோ வென்றால், அதுமட்டும் போதாது. வேண்டுமென்றால் சிறு காரியங்களில் திறமையால் மட்டும் வெற்றி காணலாம். ஒரு ரூபாய் சம்பாதிக்கவேண்டும் என்றோ ஒரு எறும்பைக்கொல்ல வேண்டுமென்றோ ஒரு பொய்யைக் கூறிச் சாதித்துவிடவேண்டுமென்றோ அற்ப ஆசையுடையவன் எளிதாக இவற்றைச் சாதித்துவிடலாம் ஆனால் சந்திரனை எட்டிப்பிடிப்பது, தன்னைத் தானடக்கிவிடுவது, ஒருபோதும் பொய் பேசாதிருப்பது ஆகியவை போன்ற பெருங்காரியங்களில் திறமை எவ்வளவு இருந்தாலும் வெற்றி கிடையாது" என்றார்.

இன்னொருவர். "பார்க்கப்போனால் வெற்றி என்பது பெரிதளவுக்குப் பிறப்பிலேயே ஏற்படும் ஒருவகைத் திறமையைப் பொறுத்தது. விளக்கமாகச் சொல்வதானால் பிறவியிலேயே ஏற்படும் பரம்பரைப் பண்பு இருக்கிறதே, அதுதான் வெற்றிக்குப் பெரும்பாலும் வழி செய்வதாகும்" என்றார்.

வாழ்க்கையி லடிப்பட்டவர் போலத் தோன்றிய கிழவர்