காதல் மயக்கம்
133
செய்வேன். எவரும் இடந்தராமல் திக்கற்றவ ளாக்கிவிட்டனர். இயற்கை யன்னையிடம் சரண்புக எண்ணித்தான் ஆற்றை நாடினேன்' என்றான்.
மருத்துவர் மனம்வெதும்பி 'ஐயோ நல்லநேரத்தில் நான் வராவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ. சரி. போனது போகட்டும். இனி எந்நாளிலும் இப்படி நம்பிக்கை சோர விடாதே' என்று கூறிச் சாத்தனிடம் இட்டுச்சென்றார்.
நீலகண்டனும் மருத்துவரும் அக்குவை இட்டுவருவதைக் கண்டு சாத்தன் ஒன்றும் புரியாமல் இவளை ஏன் இங்கே இட்டுக்கொண்டு வருகிறீர்கள். அவள் கண்ணில் நான் விழிக்க மாட்டேன்' என்றான்.
மருத்துவர் பக்குவமாக நடந்ததெல்லாம் கூறினார்.
நீலகண்டன் ‘தலைகுனிந்து அவையெல்லாம் உண்மையே’
என்றான்.
சாத்தனுக்கு அப்போதும் முழுநம்பிக்கை ஏற்படவில்லை. ‘அவள் அங்க அடையாளங்கள் உனக்கு எப்படித் தெரிந்தது?' என்று கேட்டான்.
'சச்சி கூறினாள்' என்று நீலகண்டன் கூறியதுமே சாத்தனும் அக்குவும் ஒரேகுரலில் ‘ஆ! சண்டாளி' என்றனர்.
சாத்தன் இவ்வுண்மை கேட்கச் சகிக்காமல் வெறி கொண்டு நீலகண்டன் மீது பாய்ந்து அவன் நொந்த கண் மீது மீண்டும் ஓங்கிக் குத்தினான். மருத்துவர் சென்று தடுத்தும் தடுக்கமுடியவில்லை. அக்கு, சாத்தன் முன் வீழ்ந்து பணிந்து ‘எப்படியும் எல்லாத் தீங்கும் ஓய்ந்து விட்டது. இந்நன்னாளில் வேறு தீம்பு விளைத்து அதைக் கறைப்படுத்துவானேன்' என்றாள்.
நீலகண்டன் தன் கண்ணொன்று குருடானது தனக்குப் போதிய படிப்பினை என்று அவ்வூருந் திசையும் விட்டுச் சென் றான். சச்சியோ இனி என்ன நேரிடுமோ என்றஞ்சித் தற்கொலை செய்துகொண்டாள்.
அக்குவின் அடுத்த குழந்தை அனைவரையும் இன்பத் திலாழ்த்தி இத்தீய பழிகளை மறைக்க வைத்தது.