132
||-
அப்பாத்துரையம் - 25
யாரும் இல்லை. நான் சொல்வதையே யாரும் நம்பு வார்கள்.'என்றான்.
அவள் 'கடவுளே எனக்குச் சாட்சி' என்றாள்.
நீலகண்டன், “கடவுள் வழக்கு மன்றத்திற்கும் வரமாட்டார். அவர் ஆளாக எவரும் இங்கே கிடையாது. ஆகவே என் வாய் மொழிக்கு எதிர்மொழி செல்லாது.
“ஆள் ஏன் இல்லை. இதோ" என்று ஒருகுரல் பின்னா லிருந்து கேட்டது. நீலகண்டன் திரும்பிப் பார்த்தான். அது அவ்வூர் மருத்துவர் என்று கண்டான். அவர் 'அடவஞ்சகா, உன் காலைமாலை வழிபாடுகளும் ஒழுக்கப் பூச்சும் எல்லாம் இதற்குத் தானே. கொலைபாதகர்களுக்கும் இல்லாத துணிவுதானே அதன்பயன்' என்றார்.
நீலகண்டன் வெட்கித் தலைகுனிந்தான்.
மருத்துவர் மேலும் 'ஒரு சூதறியாத நற்குல மங்கையைப் பாழ்படுத்தத் துணிந்தாய்! ஓர் ஒப்பற்ற நண்பன் குடும்பமென்றும் எண்ணாத நன்றி கெட்ட பதரானாய்! ஆளற்ற, திக்கற்ற இடத்தில் தான் ஒழுக்கத்திற்கும் கடவுட் பற்றுக்கும் சோதனை என்பதை மறந்தாய்! உன் போன்றவர்கள் கடவுளின் பெயரையே பழிக்கு இழுத்து விடுகிறார்கள்' என்று இடித்துரைத்தார்.
அவர் எங்கே தன் கோபத்தில் ஊரெல்லாம் தன் பெயரைத் தூற்றுவரோ என்று அவன் உடலம் நடுங்கிற்று. அவன் அவர் காலடியில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படியும் தன் நொந் தழிந்த கண்ணை மேலும் தீங்குதராமல் கட்டியுதவும் படியும் வேண்டினான்.
மருத்துவர் 'உன் கண்ஒன்று கெட்டது போதாது; இரண்டும் கெடவேண்டும். உன்னிடம் எனக்கு இரக்கம் கூடக் கிடையாது. ஆயினும் சாத்தனிடம் நீ உன் குற்ற முழுவதும் ஒத்துக்கொண்டால் கட்ட இணங்குகிறேன்' என்றார்.
வேறு வழியின்றி நீலகண்டன் அதற்கிணங்குவதாக ஒத்துக் கொண்டு அவருடன் சென்றான்.
மருத்துவர் அக்குவுக்கு ஆறுதல் கூறி ‘நீ எங்கேயம்மா போய்க்கொண்டிருந்தாய்' என்று கேட்டார். அக்கு 'நான் என்ன