காதல் மயக்கம்
66
131
வழிகளையும் அடைத்தன. மாலைவரை பல இடமும் சுற்றி மாலையில் ஆற்றை நோக்கி நடந்தாள். ஊர்ப்புறத்தே செல்லு கையில் நீலகண்டன் எதிர்பட்டு அவளைத் தடுத்து நிறுத்தி கணவன் பழிசுமத்தி விட்டபின் உனக்குப் போக்கிடமில்லை. ஆகவே என்னுடன் வந்து விடு. உனக்கு நல்ல தொலைவிடத்தில் வீடு தருகிறேன். அவனை எதிர்பாராது யாருமறியாமலிருந்து வாழலாம்' என்றான்.
ஊருக்குக் கடவுளடியாராய்க் காட்சிதரும் அக்கெடு கேடனையும் அவன் வஞ்சகப் பேச்சையும் கேட்க மனமில்லாது அவள் காதைப் பொத்திக்கொண்டாள். ஆனால் அவன் அண்டிப் பேச்சுக்கொடுக்க வரவே, அவள் சீறி ‘நாயே, எட்டி நட. உன் வரிசையை யாரிடம் காட்டுகிறாய்' என்று சினந்து கூறினாள். அப்போதும் அவன் அவளைவிடாது தொடர்ந்து ‘உன் செருக்கு இனி செல்லாது. உனக்கு இப்போது யாரும் துணையில்லை. நான் எதுசெய்தாலும் கேட்பவர் கிடையாது. ஆகவே அருமைகெடாமல் என் சொற்படிநட' என்று கூறிக் கொண்டு அவள் கையைப் பிடிக்க எட்டினான்.
அவள் திமிறிக்கொண்டு ஓடலானாள். அவன் அவளைத் துரத்திக்கொண்டுபோய்ப் பிடிக்க முயன்றான். தனியிடத்தில் புலியிடம் அகப்பட்ட மான்போன்ற அவள் செய்வதறியாது திகைத்தாள். ஆயினும் எப்படியாவது தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி அங்கே கிடந்த கல்ஒன்றை எடுத்து அவன்மீது முழுவலிமையுடன் எறிந்தாள். அது அவன் இடக் கண்ணில் பட்டு அதைக்கெடுத்துவிட்டது. அதிலிருந்து வழியும் இரத்தத்தைக் அவன் உட்கார்ந்து
கையால் விட்டான்.
அழுத்திக்கொண்டு
ஒரு பெண்ணுக்கு ஆசைப்பட்டு ஒரு கண்ணை இழந் தேனே என்று அவன் புலம்பினான்.
கொஞ்சநேரத்திற்குள் அவன் வஞ்சப் பழிக்குணம் மீண்டும் தலையெடுத்தது. பழயபடி அக்குவைத் தொடர்ந்து என்னைவிட்டு இனியும் நீ தப்பியோடப் பார்க்கவேண்டாம். இரு; உன் கணவன் உன்னை என் சொல்லால் வெளியேற்றினான் என்ற கோபத்தால் நீ என் மீது கல்லெறிந்ததாக உன்மீது வழக்குத் தொடுக்கிறேன் பார். இப்போதே இங்கே நடந்ததற்குச்சாட்சி