130
66
அப்பாத்துரையம் - 25
குடியைக் கெடுக்கவந்த நீலி! உன் வேசங்கள் போதும். இவ்வீட்டில் இனி ஒரு நொடியும் நீ இருக்கக் கூடாது. வெளியே போ” என்றான் அவன்.
66
ஏன், நான் என்ன செய்து விட்டேன். ஏனிவ்வளவு கோபம்"
"வேண்டாம். உன் நடிப்பை நிறுத்து. உன்னுடன் கூடிக் கெடுத்தவனே பழிகளை ஒத்துக்கொண்டான்"
66
66
'என்ன, என்ன, என் பழியா? கெடுத்தவனா?”
"முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க வேண்டாம். நீ நீலகண்டனை வற்புறுத்தி என் வாழ்வைக் குலைத்ததை முழுவதும் அவன் ஒப்புக்கொண்டாய்விட்டது. இனி பேச்சுக்கிடமில்லை. இறங்கு வெளியில்."
66
‘அட கடவுளே! இப்படியும் பழி கூறுவார் உண்டா? அவர் சொன்னால் முன்பின் ஆராயாமல்"
‘எனக்கு ஆராயவும் வேண்டாம் சீராயவும் வேண்டாம். இந்நொடியே இவ்வீடு விட்டுப்போ, குடிகேடி' என்று அவன் அவளைப் பிடித்துத்தள்ள எழுந்தான்.
குடிகேடி, சண்டாளி என்று அவன் இரைவதை எல்லாம் இது வரை கேட்டுக்கொண்டிருந்தவள், தான் கற்பிழந்தவள் என்று கணவனே நம்பிவிட்டான் என்று கண்டதுமே அடக்க முடியாத ஆத்திரம் கொண்டாள்.
இதுவரை அடங்கிக்கிடந்த அவள் பெண்மையின் ஆற்றல் முழுதும் வீறுடன் எழுந்துநின்றது. அவள் அவனை நோக்கி “என் மீதா இப்பழி? என்மீதா இத்தூற்றுதல்? இது யாருடைய ய தூண்டுதலானாலும் சரி. அவர்கள் கோளூரை ஒரு நாள் விளங்கும். நீங்கள் ஒரு நாள் வருந்த வேண்டிவருவது உறுதி” என்றுகூறி அவன் போ என்று மறுமுறை கூறுமுன் சரேலென வெளியேறினாள்.
அவள் தன் உறவினர், நண்பர், உற்றார் ஆகிய பலரிடமும் சென்று தன் கணவன் பழிச்சாட்டைக் கூறித் தனக்கு வேலையும் கூலியும் நாடினாள். ஆனால் 'கணவன் பழித்தான்' என்ற தீச்சொல் காட்டுத் தீப்போல் பரவி அவளுக்கு எல்லா