காதல் மயக்கம்
129
சாத்தன்: என்ன! என்ன! வாலும் தலையும் இல்லாமல் கூறுகிறாய். விவரமாய்க் கூறு.
நீலகண்டன்: பிள்ளையில்லாததால் அவள் என் மீது தவறாக எண்ணம் கொண்டு நடந்ததை நான் கண்டித்தேன். அதை உன்னிடம் அரை குறையாகச் சொல்லியும் அதை நீ அசட்டை செய்ததால் உன் தடங்கல் கிடையாது என்று சொல்லி என்னைத் தன் மாயவலையில் சிக்க வைத்துவிட்டாள்.நானும் ஏமாந்து உன் நட்புக்குக் கேடு செய்து வருகிறேன். இனி இப்பொல்லாங்கி லிருந்து விலகியே தீரவேண்டும். ஆகவே என்னை உன் வீட்டுக்கு வர வற்புறுத்தாதே.
சாத்தன் இச்செய்தி கேட்டு முதலில் அவநம்பிக்கையும் பின் குழப்பமும் சினமும் கொண்டான். ‘உன் மனம் போல் கண்டபடி அளக்காதே. இதை நான் நம்பவில்லை. நீ ஏதோ மனத்தில் வைத்துக் கொண்டு கயிறு திரிக்கிறாய்' என்றான்.
66
யட
'அப்படியானால் இதோ என் தெளிவுகள்! இனியாவது உண்மையறிந்து என் வழிக்கு வராதே. நான் அவளை இழுத்தேன் என்று அவள் உன்னிடம் கூறிப்பார்த்தாள். நீ அதைப் பொருட் படுத்தவில்லை! இது பொய்யா? என்னுடன் அவள் நீ இல்லாத சமயம் நெருங்கி உறவாடி, திடீரென்று நீ வந்துவிட்ட நீ போதெல்லாம் பேசாமலிருப்பது கண்டு நீ ஏன் என்று கேட்ட போது, நான் 'அவளுக்குக் குணமில்லை' என்றேன். அவளும் 'ஆம்' என்றாள்! இது பொய்யா! அதுதான் போகட்டும், அவளுடன் நான் பழகிய பழக்கத்துக்கு மறுக்கமுடியாத சான்று தருகிறேன். அவள் இடது இடுப்பில் ஒரு நீலமறு. வலது காலில் ஒரு மறு. இவற்றை நான் அறிந்திருக்கிறேன். என் பழிக்குச் சான்றுகள் இவை போதாதா?" என்று கோப நடிப்பு நடித்தான் நீலகண்டன். சந்தர்ப்ப பொருத்தமான இச்செய்திகள் கேட்டுச் சாத்தன் தன்னிலையிழந்து கடுஞ்சினங்கொண்டு கொதித்தான். முதலில் அவன் சினம் நீலகண்டன் மேலேயே எழுந்தது. பின் தன்னையடக்கிக் கொண்டு இவ்வளவுக்கும் காரணமான தன் மனைவியை வெளியேற்றி விடுவதென்று உறுதி கொண்டு வீட்டை நோக்கிப் பாய்ந்து சென்றான்.
அக்கு அவன் சீற்றத்தைச் சற்றும் உணரக்கூடவில்லை. அவனும் அவளுக்கு எதையும் விளக்கிக் கூறும் நிலையில் இல்லை.