உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

||– –

அப்பாத்துரையம் - 25

ஒரசாணாகக் குன்றினாள். அவள் முகம் குருதிக்களை நீங்கி விளறிற்று.

சாலு அவளைக்கட்டிக்கொண்டு க்கொண்டு 'என் ஒளியிழந்த மாணிக்கமே! உன் பவிசும் அதுபோன போக்கும் அறியக்கூடிய வயதுகூட உனக்கு இன்னும் வரவில்லையே. எல்லாரும் நீ கண்ணும் கைந்தலையுமாய் இருந்து கழுத்து நாண் கலையாது நல்வாழ்வு பெறுவாய் என்று கூறுக்கேட்டு மகிழ்ந்திருந்தேனே. என் மகிழ்ச்சி என்னாயிற்று!' என்று புலம்பினாள்.

அம்முவின் கணவனுக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாது. அம்முவின் தாய்வீட்டில் இருந்த பொருள் எல்லாம் பெரும்பாலும் அவள் மணவிழாவிலும் அவன் அணிகலன் களிலும் செலவாய்விட்டன. ஆகவே, சீனுவின் அழவுவினை களுக்கு அம்முவின் அணிகலன்களை விற்றே செலவு செய்ய வேண்டியதாயிற்று. அவள் மணவினையின் போது தாயகத்தி லிருந்து அவளுக்கு அளிக்கப்பட்ட கலங்களும் தட்டுமுட்டுப் பொருள்களும் விற்றுச் செலவு செய்யப்பட்டுவிட்டன. அம்மு கணவனை இழந்ததுடன் வாழ்க்கைக்கான வகையுமற்றவ ளானாள்.

சீனுவுக்கு அவன் வீட்டில் தாய் தைலம் ஒருத்தி மட்டுமே யிருந்தாள். அவள் பொரள் மீது பேராவல் கொண்டவள். அக்காரணத்தாலேயே அம்மு வீட்டாரை அவள் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தாள். இப்போது மைந்தனிறந்த துயரத்துடன் அவன் பெயரால் அவளுக்கு அம்மு வீட்டாரிடமிருந்து பணம் பறிக்க வகையில்லையே என்ற துயரமும் சேர்ந்தது. அவள் துயரம் இப்போது கோபமாக உருவெடுத்து அம்முவின் மீது பாய்ந்தது. அவள் வந்தவர்களிடமெல்லாம் அம்முவின் பொல்லாத கிரகம் தன் வாழ்க்கையின் கொழுகொம்பாயிருந்த தன் மைந்த னுயிரைக் குடித்துவிட்டதென்று ஒப்பாரிவைத்தாள். அத னிடையே அம்முவின் பெற்றோருக்கும் போதிய வகைமாரிகள் கிடைத்தன.

அம்மு சிறுபிள்ளையாயினும் மிகுந்த உலக அறிவுடை யவள். கணவனை அதிகம் கண்டறிந்தவளல்லளானாலும் அவனிடம் ஆழந்த நேசம் வைத்திருந்தாள். தைலம் தன்னையும் தன் பெற்றோரையும் எவ்வளவோ வைதாலும் தன்னை