உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

||--

அப்பாத்துரையம் - 25

எக்ஞன் அன்று வழக்கத்திற்கும் அதிகமாக மகிழ்ச்சியுடன் நடமாடினான். அத்துடன் தாய் தந்தையரிடமும் என்றும் விட மிகுதியான யான ஆதரவுடன் நடந்தான். அது கண்டு அவன் தாய் மதுரம் ‘ஏதடா இன்று என்றையும்விட மகிழ்ச்சியாயிருக்கிறாய். ஏதாவது புதையலெடுத்திருக்கிறாயா?'

எக்ஞன்: ஆம், அம்மா புதையல் என்றே சொல்ல வேண்டும். நான் ஒரு பெண்ணைக் கண்டு பிடித்து மணம் செய்யும் உறுதி கொண்டிருக்கிறேன்.

மதுரம்: இதற்குள்ளாகவா? கண்டவுடனேயா இதை யெல்லாம் முடிவு செய்கிறது.

எக்ஞன்: கண்டவுடன் அல்ல அம்மா, கண்டு பேசி முடிவு செய்த பின் தான் உங்களிடமும் அப்பாவிடமும் சொல்லும் துணிவு வந்தது.

தந்தை: எங்களிடம் ஏன் அவ்வளவு அச்சம்.

எக்ஞன்: வேறொன்றுமில்லை. அந்தப் பெண் ஒரு...ஒரு

விதவை.

மதுரம்: விதவையா? ஏன் இருந்து இருந்து இரு விதவை யையா பார்க்கவேண்டும்.

எக்ஞன்: பெயரளவில் தான் விதவை. அவள் மணமான பின் குடும்பமாக வாழவேயில்லை. ஆனால் ஒரு பெண் மனத் திற்குப் பிடிப்பதற்கு அவள் விதவை, அல்ல என்று பார்த்து முடியுமா?

தந்தை: நீ பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டாய். நன்மை தீமை தெரியும் வயதாய் விட்டது. எப்படியோ போ. பெண்யார்?

எக்ஞன் ‘இவ்வூர்' என்று கூறியதும் தாய் 'விதவையைத் தான் கட்டுகிறாய். செல்வத்துடனாவது கட்டப்படாதா' என்றாள்.

எக்ஞன்: நாம் ஏழையாயிருந்தால் இப்படிப் பிறர் சொல்வது நமக்கு எப்படியிருக்கும் அம்மா? மேலும் மணம் செய்யச் செல்வம் ஒன்றுமட்டுமா பார்ப்பது.