காதல் மயக்கம்
151
கோயிலில் பூசைசெய்தும் பிழைக்கிறேன். என் தங்கை மறுமணம் செய்தால் என் வாழ்க்கை என்னாவது?'
சம்பு: வேறு நல்ல நாணய முடைய பிழைப்பு உனக்குச் செய்யத் தெரியாதானால் அதற்காக உன் தங்கை வாழ்விழக்க வேண்டுமோ? அதற்காக உன் தங்கையென்று பாராமல் உதைக் கிறாய். பழி பேசுகிறாய்; நீயும், உன் புரோகிதமும்!' என்று காய்ந்தார்.
மாதேவனுக்குத் தந்தையும் தாயும் தங்கை பக்கமாயிருந்து தன்னை யவமதித்தது போலத் தோற்றிற்று. 'நீங்கள் எக் கேடேனுங் கெடுங்கள். நான் போகிறேன் என்றான்.
சம்பு: 'மாதேவா. நீ அவ்வளவு எளிதாகப் போய் விடலாம் என்று எண்ணாதே. உனக்குத் தங்கையின் மணம் பிடிக்கா விட்டால் கண்டித்திருக்கலாம், வாதாடலாம். அவளை விட்டு நாம் எப்படி விலக முடியும். அவளை நீ பழித்தது தவறு. அதனைப்பின் வாங்கிக் கொண்டு அவளுக்கு நல் வாழ்த்துக் கூறு. இல்லாவிட்டால் நான் உன்னைப் பழிக்க நேரிடும். அதோடு இவ்வீட்டில் நீ காலடியும் எடுத்து வைக்கக் கூடாது' என்றார்.
மாதேவன் ஊர்க்கோபத்தைவிட இப்புதிய புரட்சிகரமான வீட்டுக் கோபத்துக் கஞ்சினான். தங்கையை நோக்கி. 'எங்கே வாழ்ந்தாலும் நீ வாழ்வாயாக' என்று கூறி விட்டுச் சென்றான்.
அம்முவிடமிருந்து இச்செய்திகளை அறிந்த எக்ஞன் எதிர்பாராத இவ்வளவு விரைவில் அம்மு வெற்றி யடைந்தது கண்டு 'பார்த்தாயா, என் வேலை தொடங்கு முன் உண்மைக் காதல் எவ்வளவு காரியம் சாதித்தது பார். இனி என் காதல் வரிசையையும் பொருத்துக் காணப்போகிறாய்' என்று கூறி விட்டுச் சென்றான்.
எக்ஞன் தாய் தந்தையரிடம் எல்லையில்லாப் பற்று உடையவன். தன் உழைப்பாலும் அறிவுத்திறத்தாலும் ஆதர வாலும் அவர்கள் மனம் கோணாமல் நடந்து வந்தான். ஊரிலும் அவனுக்கு நல்ல வருவாயும் மதிப்பும் இருந்தது. எக்ஞன் சென்ற விடம் வம்பு வழக்கு எதுவுமிராது என்ற நல்ல பெயர் அவனுக்கிருந்தது.