உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 25

வாழ்த்திவிட்டார். பெற்ற வயிறு உன்னை வாழ்த்தக் கேட்கவா வேண்டும்!” என்றாள்.

இருவர் மனப் போராட்டத்திடையேயும் அவர்கள் அன்பின் மடிவைக் கண்டு அம்மு கனிவுடன் இருவர் காலடி யிலும் விழுந்து வணங்கினாள்.

அச்சமயம் மாதேவன் அங்குவந்து 'இது' என்ன நாடகம்'

என்றான்.

சாலு அவனைத் தனியே ஒரு மூலைக்குக்கொண்டு சென்று அவனிடம் ஒன்றிரண்டு மொழிகளில் செய்தியைக் கூறினாள். அவன் நாணறுந்த வில்போல் நிமிர்ந்து நின்று 'பேயே உனக்கு மணவாழ்க்கை வேறா' என்றான்.

தாய்தந்தைய ரிருவரும்கூட அவன் சினம் கண்டு நடுங்கினர்.

அம்மு கண்ணீரும் கம்பலையுமாய் அவன் காலில் விழுந்து 'என் பிழையைப் பொறுத்து என்னை வாழ்த்த வேண்டும் அண்ணா' என்றாள்.

அவன் அவள் தலையை எட்டி உதைத்து ‘நீ பாழாய்ப் போக, உன்னை மயக்கிய அந்தப் பாதகனும் குட்டிச்சுவராய்ப் போக' என்று எரிந்து விழுந்தான்.

இதுவரை ஒதுங்கிநின்ற சம்பு அவனைச் சரேலென்று அவள் பக்கமிருந்து தள்ளி 'மனிதத்தன்மை அற்ற பதரே, அவளைக்குற்றம் சொல்ல உனக்கு என்னடா தகுதி. ஏதோ அவள் பெண்ணாய்ப் பிறந்ததனால் இவ்வளவு துன்பத்துக் காளானாள். அவளைப் போன்ற நிலை உனக்கு வந்தால் நீ எத்தனை தடவை மணம்செய்து கொள்ளமாட்டாய்? மணம் செய்யாமலே தவறு செய்தால்கூட உன்னை யார் குறை கூறு வார்கள்?' என்றார்.

சமயப்பற்று மிக்க தந்தையிடமிருந்து இந்த நியாயத்தை எதிர்பாராத மாதேவன் கல்லாய்ச் சமைந்து நின்றான். பின் ஒருவாறு தேறி “அப்பா என் கோபத்துக்கு மன்னிக்க வேண்டும். ஆனால் நம் நிலைமையை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் பிராமணர். உங்கள் காலத்தில் நீங்கள் புரோகிதம் செய் தீர்கள். இப்போது நான் புரோகிதம் செய்து பிழைக்கிறேன்.

,