காதல் மயக்கம்
149
அவள் வாழ்வின் மாறுதலை அவள் கூறித் தாய் தந்தையர், அண்ணன் அறியவேண்டி வரவில்லை. என்றுமில்லா அவளது முகமலர்ச்சியே அவர்களுக்கு வியப்பை ஊட்டின. அவள் அவளுடைய மணவிழாவின் ஒப்பனையின் போது கூடப்பொன் வேய்ந்த பூ மொட்டையாய்த்தானிருந்தாள். 'இன்றோ அன் றலர்ந்த பொன் மயமான செந்தாமரை மலராய்க் காட்சி யளித்தாள். திருமகளின் உயிரோவியம் போல நின்ற அவளைத் தாய் கட்டிக் கொண்டு 'என்ன மாறுதலம்மா இது. காலத்தில் மலராத இம்மலர்ச்சி கண்டு நான் களிப்பதா, கண் கலங்குவதா அம்மா' என்றாள்.
அம்மு சற்றுநேரம் வாளாநின்றாள். பின் ஒருவாறு தெளிந்து ‘நான் மனமறிந்து என்ன தவறும் செய்யமாட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமே, அம்மா. ஆனால் என் செயலுக் கிடமின்றி எக்ஞர் என்னை மறுமணம் செய்து கொள்ள உறுதி கூறிவிட்டார். அவர் கணவனுரிமையை ஏற்றுக் கொண்டார். நீங்கள் வாழ்த்தினால் நான் மனைவி உரிமை பெறுவவேன்’ என்றாள்.
சாலுவால் ஒன்றும் பேசமுடியவில்லை. சம்புவுக்கோ குரல் கம்மிற்று. இருமுறை கனைத்துக்கொண்டு விக்கிவிக்கி‘என்னால் உன்னைக் குறைகூற முடியவில்லை அம்மா? உன் நிலையிலுள்ள பெண்கள் உள்ளத்துயரை யாராலும் ஆற்றமுடியாது. அவர்கள் வாழ்வைத்தான் அடக்குவார்கள். அல்லது அழிப்பார்கள். நீயோ உன்னைக் கூடுமான மட்டும் அடக்கிக் கொண்டு வந்திருக்கிறாய். உன் பொறுப்பை ஏற்றவரும் தகுதியுடன்தான் நடந்திருக்கிறார். பெற்றவன் என்ற முறையில் ஊருக்கு நான் அடிமை. ஆனால் அறிவும் மனிதத்தன்மையும் உடையவன் என்ற முறையில் நான் உன்னை வாழ்த்துகிறேன். இதுதான் உன் முதல் காதல் அனுபவம். உன் காதல் மணம் நன் மணமாகுக' என்றார்.
சாலுவுக்கு அவரவ்வளவு அறிவின் துணிவு வரவில்லை. ஆனால் அவர் மனக்குளிர்ச்சி அவளையும் ஆட்கொண்டது. அவள் மீண்டும் அம்முவைத் தழுவி உச்சிமோந்து “எங்களைப் பழி சூழ்ந்தாலும் சூழட்டும், அம்மா. நீ மகிழ்ச்சியா யிருந்தால் போதும். அறிவுமிக்க உன் அப்பாவே துணிந்து உன்னை