உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 25

அம்முவைக் காதலிக்குமுன்பே தைலத்துக்கும் அவன் இறந்த புதல்வனுக்கும் எக்ஞர் பல அரிய உதவிகள் செய்ததுண்டு. அவளைக் காதலிக்கத் தொடங்கிய பின் அவன் வாரந்தவறாது தைலத்தைக்கண்டு அவள் குறைகளை விசாரிப்பான். பணக் குறையே பெருங்குறையாகக் கூறிய அவளிடம் அவன் ‘நான் விரும்பும் பெண்ணை எனக்குக்கிடைக்கும்படி நீ உதவினால் உனக்கு விரும்பியதெல்லாம் தருவேன்' என்றான்.

று

பெண் யார் என்று கேட்காமலே அவள் ஒத்துக் கொண்டாள். தெரிந்தபின் பணஆர்வம் அவ்வழி நிறுத்தியது. இதுவே அவள் நடைமாற்றத்தின இரகசியம்.

ஆனால் பிள்ளைக்குப் பிள்ளையாய் எக்ஞனும் தன் பழைய மருமகளும் நடப்பதுகண்டு அவள் உள்ளபடியே மாற்றமடைந்து அவர்களுடனேயே குடிவந்துவிட்டாள்.

மன

மணநாள் கழிந்து மணமக்கள் அளவளாவியிருக்கும் போது அம்மு ஒருநாள் கணவனை நோக்கி 'இவ்வளவு புரட்சிகரமான வெற்றி எப்படி நமக்குக் கிடைத்தது என்று எனக்கே புரியவில்லை' என்றாள்.

'இன்பம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் உரிமை. அது பெறப் போராடச் சித்தமாயிருக்கவேண்டும் . அரை குறையாக அதனை நாடினால் கிட்டாது' என்றான்.

'பெண்கள் தம் இன்பவாழ்வு தம் உரிமை எனக்கருதிப் போராடாததுதான் அவர்கள் குற்றம்' என்று அம்மு அறிந்தாள்.