158
||-
அப்பாத்துரையம் - 25
விசுவநாதன் தன் புதிய திட்டத்தை அவளிடம் வெளி யிட்டான். ‘ஆங்கிலச் சட்டம் இருக்கிறதே, அதன் அழகே தனி தான்! மனக்கவலைக்குக்கூட ஒரு விலை வைத்து அது மதிப்பிட்டுத் தருகிறதே, அது நமக்கு எவ்வளவு நன்மையா யிருக்கிறது!'
உருக்கு: 'ஆம். இப்போது உங்களுக்கு அது நன்மையாகத் தோன்றுவது உண்மைதான். ஆனால் அதனால் நமக்குத் தீமை யும் வராமலில்லை. 'குன்றிராமன்' வழக்கில் நாம் அவனுக்கு நட்டஈடு கொடுக்கவேண்டிவந்ததே!
விசு: சட்டம் எப்போதும் நேர்மையாய் அமைவதில்லை. அமையாததும் ஒருவகையில் நல்லதுதான். ஆனால் எதிர் கட்சியார் அடிக்கடி மன்றத் தலைவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து வழக்கைக் கெடுத்து விடுகிறார்கள்.
உருக்கு: உங்கள் வழக்குகள் ஒன்றிலாவது நீங்கள் தோல்வி யடையாமலில்லை, தோல்விகள் அத்தனையும் எதிர்கட்சியின் கைக்கூலியினால்தானே!
விசு: கைக்கூலி இல்லையானால் அவ்வளவு வழக்கிலும் எனக்குத்தானா தோல்வி வரவேண்டும்? ஆனால் இதை யெல்லாம் உன்னிடம் சொல்லி என்ன பயன்? நீ எப்போதும் என் எதிரிகள் பக்கம்தானே பேசுவாய்?
உருக்கு: அப்படியானால் நானும் கைக்கூலி வாங்கியிருப் பேன் என்று சொல்லுங்களேன்.
விசு: அப்படிக்கூட நான் எண்ணக்கூடும்.
உருக்கு சற்றுநேரம் பேசாமலிருந்தாள். பின் “நான் சொல்வதைச் சொல்லி விடுகிறேன். நமக்கும் வழக்குக்கும் ஏழாம் பொருத்தம் . அதில் இப்போது வழக்குத் தொடுக்கவோ பணம் இல்லை. ஆகவே வழக்கு மன்றத் திசையை நாடாதிருந்தால் ன்றைய நிலையிலாவது காலந்தள்ள முடியும்" என்றாள்.
விசுவநாதன் இதற்கொன்றும் மாற்றம் தரவில்லை. மறுநாள் மாலை அவன் முகமலர்ச்சியுடன் மீண்டும் அவளிடம் வந்து ‘எனக்கு இப்போது ஒரு புதுவழி தோற்றுகிறது. அதன்படி நடந்தால் நம் தொல்லையெல்லாம் தீரும்' என்றான்.