உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

அப்பாத்துரையம் - 25

உருக்கு: நீங்களும் ஒரு ஆண் பிள்ளை என்று வெட்க மில்லாமல் கூறிக் கொள்கிறீர்கள்.

விசு: நான் யாரிடமும் அப்படி பெருமையடிப்பது கிடை யாது. என் இயற்கைப்படி நான் நடக்கிறேன். என் வழி உனக்குப்பிடித்தமானால் சொல்லு. அல்லது உன்பாடு.

உருக்கு: நீங்கள் ஆண்பிள்ளை யல்லவானால் உங்களைக் கட்டிக்கொண்ட பழியை நான் சுமக்கிறேன்.

விசு: சரி. அப்படியே ஆகட்டும். ஆனால் இன்னொரு தடவை கூறுகிறேன். இலட்சுமி மணத்தினால் நமக்குப் பணம் இல்லாது போவதை மட்டும்தான் குறிப்பிட்டேன். தீமை அத்துடன் நிற்காது. நீ என்னையும் இழந்துதா னாகவேண்டும். நான் காவலிடப்படுவது உறுதி.

உருக்கு: ஏனப்படி?

விசு: இலட்சுமி கணவன் அவள் செல்வத்தின் வருவாய் பற்றிய வரவு செலவுக் கணக்குக் கேட்பது உறுதி. நம் வகையில் அவள் வருமானத்திலிருந்து நான் எடுத்துச் செலவிட்ட ஆயிரத்தைந்நூறு ருபாய்களையும் நாம் நம்பிக்கை மோசடி செய்ததாக நான் குற்றஞ் சாட்டப்படுவேன்.

உருக்கு: நம் இலட்சுமி அவ்வளவு தூரம் செல்ல இணங்க

மாட்டாள்.

விசு : கட்டாயம் செய்வாள். மணமான பின் கணவன் செயலுடன் அவள் செயல் ஒன்றுபட்டுவிடும். அவள் தொடக் கத்தில் சிறிது தயங்கினால்கூட நயத்தாலோ பயத்தாலோ கணவன் வழிக்கு அவள் வந்து விடுவாள்.

உருக்கு: அதைநான் இது வரை எண்ணிப்பார்க்க வில்லை தான். ஆனால் மணமாகுமுன்பே இலட்சுமியிடமிருந்து எல்லாக் கணக்கையும் அவள் பார்த்துத் திருப்தி பட்டுக்கொண்டதாக எழுதிவாங்கிக் கொள்வோம்.

விசு: நீ வழக்கு நடவடிக்கை தெரியாது பேசுகிறாய், வயது வராதவளும் மணமாகாதவளும் ஆன ஒருத்தியின் கையொப்பம் செல்லுபடியாகாது. இலட்சுமியை நான் மணந்து கொள்வதைத்