உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

161

தவிர உண்மையில் வேறு நமக்கு வழியில்லை. அதற்கு ஏன் தடங்கல் கூற வேண்டுமென்பதை நான் உணரக் கூடவில்லை. பலதார மணங்களை நீ வெறுக்கிறாய் என்று கூற முடியாது. அத்தகைய பல மணங்களுக்கு என்னையும் இழுத்து கொண்டு போயிருக்கிறாய்.மேலும் இன்னாரென்றும் இப்படிப் பட்டவன் என்றுந் தெரியாத ஒருவனுடன் மணம் செய்துகொண்டு உன்னையும் விட்டுச் செல்ல வேண்டுவதை விட இங்கே உன் னுடன் இருப்பது மேலல்லவா?

தங்கையை விட்டுப் பிரியமனமில்லா உடன் பிறப்புப் பாசம் மற்றெல்லா நியாயங்களையும் விட உருக்குமணியின் மன உறுதியை இளக்கிற்று. அவள் மனமாற்ற மறிந்த விசுவநாதன் மேலும் ‘நான் என் நன்மையை மட்டும் எண்ணிக் கூறவில்லை. எல்லார் நன்மையையும் கருதித் தான் கூறுகிறேன்!' என்றாள்.

கடைசியில் உருக்குமணி ‘சரி இலட்சுமி இதனை ஏற்றால், என்னால் தடங்கலிராது' என்றாள்.

விசு: நன்றாகச் சொன்னாய். இலட்சுமிக்கு இவை பற்றி என்ன தெரியும்? அவள் சிறுபிள்ளை. நீ என்னை மணந்து கொண்டபோது உன்னைக் கேட்டுக் கொண்டா செய்தார்கள். அப்படியிருந்தும் நாம் இன்பமாக வாழவில்லையா?

உருக்கு அடைந்த இன்பம் அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் பேசிப்பேசி அசந்து போனாள். நாலு புறமும் ஓடித் திக்குமுக்காடிய முயல் இனிச்சாகவாவது செய்வோம் என்று சோர்ந்து விழுவது மாதிரி அவர் வழி நிற்க முடிவு செய்தாள். ஆனால் அவள் உணர்ச்சியின்மை ஒரு கொட்டாவியாய் வெளி வந்தது.

'சரி, எல்லாம் உங்கள் மனம் போல் நடக்கட்டும். ஆனால் எனக்கு ஒரே ஒரு உறுதி வேண்டும். இனிமேலாவது வழக்கு மன்றத்துக்குப் போகக் கூடாது'என்று கேட்டாள் உருக்கு. இதனைப் பலபட எதிர்த்தும் வழியின்றி விசுவநாதன் வேண்டா வெறுப்பாய் ஏற்றுக் கொண்டான்.

விசுவநாதன் முடிவு பற்றிக் கேள்விப்பட்ட இலட்சுமியின் சிற்றப்பனார் இதனை எதிர்த்து ஊர் முழுதும் பறையடித்தார். அதன் பயனாக உள்ளூரில் இலட்சுமியை விசுவநாதன் மணந்து