162
||-
அப்பாத்துரையம் - 25
கொள்ள முடியாதென்ற நிலை ஏற்பட்டது. ஆகவே விசுவநாதன் ஊராரை ஏமாற்றி வெளியூரில் சென்று மறைவாகக் காரியம் முடிக்க எண்ணினான். இராமேசுரத்திற்குப் புண்ணிய யாத்திரை செல்வதாகச் சாக்குக் கூறிக்கொண்டு அங்கே சென்றான். அத்திருப்பதியில் உள்ள பல்லாயிரம் குருக்களில் ஏழையாக ஒருவரைக் கண்டு பிடித்து இத் திருமணத்தை முடித்துத் தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. பொய்யர்கள் பலரிடம் பழகிப் பொய்மைகளைக் கரைத்துக் குடித்த அக்குருக்கள் மறைவாகத் திருமணம் செய்வதில் சூதிருக்கவேண்டும் என்று ஊகித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிப் பெருந்தொகை கேட்டார். விசுவநாதன் அது நேர்மையற்ற தொகை என்று வாதிட்டும் அவர் 'மணமும் நேர்மையற்றது தானே. பெண் கொடுக்கும் உறவினர் இல்லாதது எனக்குத் தெரியாததா? நீர் வேண்டுமானால் வேறு குருக்கள் பார்த்துக் கொள்ளும்' என்று உலுக்கவே வேறுபுகலின்றிக் குருக்கள் கேட்டுக் கொண்ட தொகை கொடுக்கப்பட்டது.
இவ்வளவும் இலட்சுமியறியாமலே நடந்துவிட்டது. மணத்துக்கு மூன்றுமணி நேரமிருக்கும்போது உருக்கு தங்கையைச் சரிப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள். இச் ச் செய்தியைக் கேட்டதும் சிறு குழந்தையாகிய இலட்சுமி கூட அக்காளிடம் சினங்கொண்டு சீறினாள்.
‘என்ன அக்கா, அத்தானையா நான் மணம் செய்வது. உனக்குப் பைத்தியமா என்ன' என்றாள் அவள்.
உருக்கு: என்னம்மா இதற்கு இவ்வளவு கோபிக்கிறாய்? காவேரி தன் தமக்கை கணவனை மணம் செய்து கொள்ள வில்லையா?
நெறி தவறிய மூத்தோர் பசப்புச் சொற்களைக் குழந்தையின் கூரிய அறிவு சிதறியடித்தது. இலட்சுமி 'காவேரி தமக்கை கணவனை மணந்தது தமக்கை யிறந்த பின். இருக்கும் போதல்ல!’ என்றாள்.
உருக்கு ‘நானும் இறந்திருந்தால் எவ்வளவோ நன்றா யிருக்கும்!' என்று கண்ணீர் வடித்தாள். இலட்சுமி அவளைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்களைத் துடைத்து ‘உன்னைப் புண்படுத்த நான் விரும்பவில்லை, அக்கா. என்னை ஏன் அத்தானை மணந்து கொள்ளச் சொல்கிறாய்!' என்றாள்.