உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

163

வறுமைத் துயரம், தங்கையன்பு ஆகியவற்றிடையே உருக்குவின் உள்ளம் ஊசலாடத் தொடங்கிற்று. அவள் 'இலட்சுமி, உன்னிடம் நான் என்ன சொல்லட்டும்! எங்களிடம் பணம் இல்லை. நாங்களும் குழந்தையும் பட்டினியில்லாமல் வாழ உன் செல்வம் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அதற்காகவும் உன் வாழ்க்கையைப் பாழாக்க நான் வற்புறுத்தவில்லை. நீ உன் நன்மையைக் கவனித்துக் கொள்' என்றாள்.

இலட்: 'அக்கா' உங்களுக்கு உதவி செய்ய நான் எதுவும் செய்வேன். அத்தானை மணந்து கொள்வது ஒன்று தவிர வேறு எது வேண்டுமானாலும் சொல்.

உருக்கு தங்கையை மார்போடணைத்துக்கொண்டு கண் கலங்கினாள். அவளால் ஒன்றும் 'பேசமுடியவில்லை. இலட்சுமி மீண்டும் ‘அக்கா உன் சொல்லை நான் தட்டுகிறேன் என் றெண்ணாதே. அத்தானுக்கு மனைவியிருக்கிறாள். நாலுபிள்ளை இருக்கிறது. அத்துடன் வயதுமாயிற்று. அவரை மணந்துதான் இந்தச் செல்வத்தை உங்களுக்குத் தரவேண்டுமா என்ன? நான் மணம் செய்யாமல் கன்னியாகவே இருந்துவிடுகிறேன். செல்வத்தை எல்லாரும் நன்றாகச் செலவு செய்யலாமே என்றாள்.

உருக்குவின் கன்னங்கள் வழியாகக் கண்ணீர் பெருகிற்று. அவள் இலட்சுமியை இன்னும் இறுகத் தழுவிக்கொண்டு ‘கண்ணே, நீ ஓர் ஒப்பற்ற மாணிக்கம். ஆனால் நான் படுபாவி, மனித உணர்ச்சிகூட இல்லாமல் இந்தக் காரியத்திற்கு உன்னிடம் பேச வந்தேன். நீ எனக்காக எந்தத் தியாகமும் செய்வாய். ஆனால் நான் அதை ஏற்கமாட்டேன். மணவினை முடிக்காமலே நாம் திரும்புவோம். வேறுபயனில்லாவிட்டாலும் அந்தப் பணம் பிடுங்கிக் குருக்களுக்கு மேலும் பணம் பிடுங்கும் ஆசையிலாவது ஏமாற்றம் வரட்டும். நாளடைவில் உனக்குப் பிடித்தமாக வேறு திருமணம் செய்துகொள்ளலாம்' என்றாள்.

இலட்: ‘ஏன் அக்கா, நான் திருமணம் இல்லாமலே இருக்கிறேனே’

உருக்கு: ‘ஆம், நீயிருந்தாலும் நம்பாழும் சமயமும் சாதியும் அப்படியிருக்க வொட்டாதம்மா! கிழவனையோ பிணத்தையோ