166
அப்பாத்துரையம் - 25
அடிக்கடி உருக்கு தன் கணவனிடம் 'உங்களைப் போல் உலுத்தரை இந்த உலகில் காண முடியாது. என்னைத்தான் ஏமாற்றி ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள். அந்தக் கருத்தறியாக் கைந்தலையையும் ஏமாற்றலாமா? என்பாள்.
அடிக்கடி சிரித்துக்கொண்டு 'நான் என்ன செய்வது. விதி என்னை ஏமாற்றவில்லையா? அதே விதி உங்களையும் இழுக் கிறது.மேலும், ஆபத்துக்கு ஏது பாவம்' என்றான்.
அவன் சொற்களைவிட அவன் சிரிப்பு அவளுக்கு நல்ல படிப்பினையா யிருந்தது. தன்மதியே அவளுக்கு விதியாய் உதவிற்று என்று உணர்ந்தாள். ஆயினும் அவள் குழம்பிய மனத்தில், அதைவிட்டுத் தப்பும் வழி தோன்றாது திகைத்தாள்.
இருவரும் வஞ்சிக்கப்பட்டோமே என்ற துன்பம் அவளை வருத்தி வாட்டியது. ஆனால் அத்துன்பத்தைக் கூடிய மட்டும் இலட்சுமிக்கு அறிவிக்காதிருந்து வந்தாள். ஆயினும் அவள் பருவமடைந்தபின் அவளால் அதை மறைத்து வைக்கக்கூட வில்லை. மெள்ள நடந்தவை யாவற்றையும் விடாது எடுத்துக்கூறி 'என் அறியாமையால் நானே உன் வாழ்க்கையைப் பாழாக்கி னேன் என்று' கூறினாள்.
ஒன்று மறியாத பாவை இலட்சுமி அவளுக்குக் கூறிய மறுமொழி அவள் அறிவுக் கண்களுக்கு முதலில் வியப்பையும் பின் புதுப்பாதையையும் காட்டுபவையாயிருந்தன.
66
"அறியாமல் செய்த பிழையை இப்போது அறிவுடன் திருத்திக்கொள்வதுதானே" என்றாள் இலட்சுமி.
உருக்கு: அது எப்படி முடியும்? வேடிக்கைமணம் என்றுகூறி மணம் நடத்தி விட்டார்களே.
இலட்சுமி: வேடிக்கை மணம் அல்லவென்றால் வஞ்சக மணம் என்றாகிறது. வேடிக்கை மணத்துக்குள்ள மதிப்புக்கூட வஞ்சக மணத்துக்குக் கிடையாது. அதை நான் மதிக்கப் போவதில்லை.
உருக்கு: நீ மதிக்காவிட்டாலும் சட்டம் மதிக்கிறதே. நான் என்ன செய்வது?