உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

அப்பாத்துரையம் - 25

காமா: அதெல்லாம் நல்லதுதான். குணமும் வயதும் ஓரளவாவது ஒத்திருக்க வேண்டுமே. ஆள் யார் என்று தான் கூறுங்களேன்.

ஆள் இன்னார் என்றறிந்ததும் காமாட்சி சீறி விழுந்தாள். இதுதானா நல்ல இடமென்றீர்கள். பேர் வழிக்கு54 வயதாயிற்று. பல் ஒன்று கூடக் கிடையாது. தடிபோல வளர்ந்த நான்கு பிள்ளைகள் மூத்த மனைவிக்கும், ஆறு பிள்ளைகள் இரண் டாவது மனைவிக்கும் இருக்கிறார்கள். அதில் கடைசிப் பிள்ளை கூட நம் மகளுக்குக் கணவனாயிருக்கத் தகுந்த வயதுடையவன். போய்ப் போய் இதைப்பார்த்துவிட்டுத்தானா எக்களிப்புடன் வந்து கனைக்கிறீர்கள்!' என்றாள் அவள்.

இ.சு: பெண்களுக்கு இப்படிப் பேசத்தான் தெரியும். மணமில்லாமல் பெண்களிருக்கச் சமூகக் கட்டுவிடாது. செலவில்லாமலோ வரதக்ஷிணையில்லாமலோ மணம் செய்யவும் சமூகக்கட்டு வழிவிடாது. இந்நிலையில் நடை பிணங் களுக்குக்கட்டித் தலைமுழுக்குவது ஒன்று தான் சமூகம் ஏழைகளுக்கு விட்ட வழி. வேறு என்ன செய்யச் சொல்கிறாய்! ஏதோ வருகிற சனிகளில் நல்ல சனியாய் வந்திருக்கிறது. வேண்டு மானால் செய், வேண்டாமானால் விட்டுவிடு. இனி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

அவர் எரிந்து விழுந்ததனால் காமாட்சிக்குக் கோபம் எதுவும் இல்லை. அவர் கூறியவை அனைத்தையும் அவளும் அறிவாள். மனச்சான்று, சாதிக்கட்டு, பழக்க வழக்கங்களால் செயலற்றாலும் அழிந்துவிட மறுக்கும் மனச்சான்று ஒன்றுதான் பொது நீதியைப் பேசவாவது தூண்டிற்று. கூரிய அறிவுடைய பெண்மை உள்ளம் தன் ஏல மாட்டாத் தன்மையிலும் மற்றொரு கேள்விகேட்டு வைத்தது. "மாப்பிள்ளைக்கு வயதாகி யிருப்பதால், வேறொன்றும் கேட்காவிட்டாலும் அவர் புது மனைவிக்கு ஏதாவது வழி செய்வாரா? அவர் தம் வாழ்க்கைக்குக் காப்புக் கட்டவாவது (insurance) செய்திருக்கிறாரா?” என்று அவள் கேட்டாள்.

இ.சு: தானம் வாங்கும் மாட்டிற்குப் பல்லைப் பார்த்து வாங்க முடியுமா? வரதட்சிணை, நகை ஒன்றும் பேசா திருக்கையில் ஏதேனும் கேட்டு வினையை விலைக்கு வாங்கு