உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

173

முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை ஒத்துக் கெள்ளத் தான் வேண்டும்.

காமா: நன்றாய்ச் சொன்னீர்கள். திருடுபவர்களுக்கும் கொள்ளையிடுபவர்களுக்கும் சட்டம்தான் தண்டனை கொடுக்கும். சமூகத்தில் இடமுண்டு. பெண்ணை மணம் செய்யாது வைத்திருப்பவர்களைச் சமூகம் வாழவொட்டுமா? பழக்க வழக்கக்கட்டுப்பாட்டை மீற முடியா பாதே.

இ.சு: அதே பழக்க வழக்கம் தானே காசில்லாதவன் அந்த நரகவாழ்வு கூட மேல்தான். ஆனால் கூடிய மட்டும் நல்ல, அதாவது தீமை குறைந்த இடமாகப் பாருங்களேன்.

இராமசுப்பன், காமாட்சி கூறிய படியே செய்யும் உறுதி யுடன் ஒரு மாத ஓய்வு பெற்றுச் சோதிடர், திருமணத்தரகர் ஆகியவர் உதவியுடன் அலைந்தான். தரகர் கெட்ட இடம் பார்த்துத் தேடித்தந்தனர். தரகும் கேட்டனர் .சோதிடர் அக்கெட்ட இடத்திற்கும் தனித்தரகு கோரினர். சமூகக் கட்டு என்பது ஏழைகள் வாழ்வை மட்டும் கட்டி, தரகர், சோதிடர் சமூகப் பகைவரான காலிகள் ஆகியவர்களுக்கு மட்டுமே முழுச்சுதந்தரம் அளிப்பதாகும் என்று கண்டு இராமசுப்பன் மனம் நொந்தான்.

கு

இறுதியில் இருளிடையே ஒருமாய ஒளி காணலாயிற்று. சங்கரநாராயணன் என்ற அரசியல் பணியாளன் தானாக வலியவந்து பெண் கோரினான். அவன் ரூ. 200 மாதச் சம்பளம் வாங்குபவனாதலால் பல பெண்கள் வீட்டார் வந்து போட்டி யிட்டும் அவன் தர்மாம்பாளையே வேண்டி நின்றான். ஓரளவு மன ஆறுதலுடன் இராமசுப்பன் தன் வீடு வந்து மனிவியுடன் கலந்து பேசினான்.

காமா: நல்ல இடமா? என்ன அப்படி எதிர்பாராத வரவு? மாப்பிள்ளைக்கு என்ன வயதிருக்கும்!

இ.சு: நம் நிலையில் வயதைப் பார்த்தால் நல்ல இ டமாக எப்படிக் கிடைக்கும்? நிதானமான வயதுதான்.ஆனால் அரசியல் அலுவல். 200 ரூபாய் சம்பளம். வரதக்ஷிணையே இல்லாமல் சுருக்கமான செலவில்' நடத்த ஒப்புக் கொள்கிறார்கள். ஏன், நகை கூட அவர்களே போட்டுக் கொள்வார்களாம்.