உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

||-

அப்பாத்துரையம் - 25

கணவனிடம் இவ்வகை முடிவு தெரிவித்து அனுப்பி விட்டபின் காமாட்சி, "ஐயோ தருமா, உன்நிலை இப்படியா ஆயிற்று" என்று கரைந்து கரைந்து உருகலானாள். தர்மா அவளிடம் வந்து ‘நீங்கள் ஏன் அழவேண்டும், அம்மா? உங்கள் முதற் பிள்ளையை நாலுவயதில் மண்ணுக்கு இரையாக்கி விட்டு வாழவில்லையா? என்னை 18 ல் வாழ்க்கைக்கத்தானே இரை யாக்குகிறீர்கள். இரண்டிலும் உங்கள் குற்றம் ஒன்றுமில்லையே. ஒன்றில் இயற்கையின் வலிமை செயலாற்றுகிறது. மற்றொன்றில் பழக்க வழக்கமாகிய செயற்கை வலிமை செயலாற்றுகிறது' என்று தேறுதல் கூறினாள்.

அவள் எல்லாம் உற்றுக் கேட்டறிந்தாள் என்று கண்ட காமாட்சி அவளைக் கட்டிக்கொண்டு, “எல்லாம் அறிந்த உனக்கு நான் என்ன கூறுவது? அறிவைக் கொடுத்த கடவுள் ஆக்கத்தைக் கொடுக்கவில்லையே” என்றாள்.

தர்மாம்பாள் ஒன்றும் சொல்லத் துணியவில்லை. ஆனால் மனதிற்குள் “குருட்டுப் பழக்கத்தின் அடிமையாகவே இரு என்றும் கடவுளா சொன்னார்?" என்று கேட்டுக் கொண்டாள்.

மணவினையின் போது தருமா மகிழ்ச்சியுடையவளாகவே காட்சியளித்தாள். சமூகம்கூட அதுகண்டு வியப்படைந்தது. காமாட்சிக்கு அது எவ்வாறு என்று புரியவில்லை. மணவினை முடிந்தபின், “எப்படியம்மா நீ மகிழ்ச்சியுடனிருந்தாய்?” என்று கேட்டாள்.

அரை நொடியில் தர்மாம்பாளின் முகக்களை மாறிற்று. “அம்மா, சமூகத்தின் கட்டளையினால் செய்யும் காரியத்தைப் பற்றிச் சமூகத்துக்கு வருத்தமில்லாதபோது நாம் சமூகத்தின் முன் வருத்தப்படுவதாகக் காட்டுவதும் தவறுதானே. நாம் வருந்துவது கண்டு திருந்துகிற சமூகமா அது” என்றாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு பாய்ந்த பசுமரம் போல் அவள் நெஞ்சு உள்ளூரக் கருகுவதையும் ஆயினும் வெளித் தோற்றத்தில் பச்சிலைகளுடன் விளங்குவதையும் கண்டாள் காமாட்சி. கண்டு,

ச்சிறுவயதில் அவ்வளவு அடக்கமும் நடிப்பும் உனக்கு எங்கிருந்துதான் வந்ததோ' என்றாள்.