உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

177

தர்மா: சமூகத்தின் அடிமைகளாக உள்ள தாய் தந்தைய ராகிய உங்களிடமிருந்துதான்.

தாய் ஒன்றும் பேசமுடியாமல் மகளைக் கட்டிக் கொண்டு “நாம் ஏன் பெண்ணாகப் பிறந்தோம். அதுவும் இந்தச் சமூகத் தில்' என்று அழுதாள்.

தர்மாவின் மகிழ்ச்சியால் எல்லோரும் ஏமாந்தது போலவே இராமசுப்பனும் ஏமாந்தான். ஆனால் காமாட்சியைப் போல நேரடியாய்ப் பேசி அவன் அதன் உண்மையறிந்து கொள்ள முடியவில்லை. “நான் நினைத்தது சரி. இது மிக வெற்றிகரமான நல்ல மணமாக முடியும் என்று நான் அப்போதே நினைத்தேன்” என்று அவள் தற்பெருமை அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டது.

தர்மாம்பாள் தன் மணவாழ்வில் இன்பத்தை எதிர்பார்த்து ஏமாறவில்லை. ஆனால் அவள் எதிர் பார்த்ததை விட மிகுதி யான மனக்கசப்பு அவளுக்கு ஒவ்வொரு கணமும் ஏற்பட்டு வந்தது. கிழவனென்று தெரிந்தும் பணத்துக்காகவே அவள் பலியிடப்பட்டாள். ஆனால் சங்கரநாராயணன் தன் கிழத் தனத்தை மறைக்க எண்ணி வெற்றியடையாது போனாலும் சமூகத்தின் முன் தன் பொருள் நிலையை நன்கு மறைத்துக் காட்டுவதில் அவன் வெற்றிபெற்றான். மாதவருவாய் அன்றி வேறு அவனுக்குச் செல்வமில்லை. பொருட்செலவு எதுவு மில்லாமல் செய்வதானால் மணம் செய்து வாழ்ந்து கொள்ள லாம் என்றே அவன் பிள்ளைகள் அவனுக்கு உரிமை அளித் திருந்தனர். இந்நிலையில் தன் செல்வநிலையை உயர்த்திக்காட்ட மணவிழாவை மட்டுமே அவனால் பகட்டாக நடத்த முடிந்தது. அதுவும் கடன் வாங்கி. அணிமணிகள் உறவினரிடமிருந்து இரவலாக வாங்கப்பட்டு விழாவின் பின் திருப்பிக் கொடுக்கப் பட்டன. மணவிழாவுக்கான கடனை மீட்கும்வரை தர்மாவின் வீட்டுச் செலவில் பணம் பிடித்துக்கொள்ளப்பட்டது. அக்கடன் தீர்ந்த பின்பும் அப்பெயரால் தொடங்கப்பட்ட சின்னம் பிள்ளைகள் உறவினர் நலன்களுக்காக நீடிக்கப்பட்டது.

தர்மாவுக்கு இந்நிலையில் சங்கரநாராயணன் தன்னை ஏன் மணந்து கொண்டான் என்று முதலில் புரியவில்லை. அவர்