அப்பாத்துரையம் - 25
178) || கிழவர் மட்டுமல்ல, உள்ளூர நோயால் அரிக்கப்பட்ட உட லுடையவர். அவர் மணவாழ்வில் கொண்ட விருப்பம் அவளுக்கு அருவருப்பையும், இரக்கத்தையும், நகைப்பையும் தந்தது. ஆனால் அவள் நகைக்கும் நிலையில் இல்லை. பகல் முழுதும் நாயாய் உழைத்து, இன்பம் எள்ளத்தனையுமின்றி, தன் குறை கேட்பா ரில்லாத நிலையில் அவள் சிரிப்பதெப்படி? ஆனால் அவள் சிந்தித்தாள். அந்த ஒரு உரிமை இருந்தது அவளுக்கு. ஆனால் அதனைக் கூடப் பிறர் பயன்படுத்துவதில்லை என்று அவள் கண்டாள். சிந்திக்க அவளுக்குப் பல செய்திகள் விளங்கின. தன்னை மணக்காவிட்டால் வீட்டில் சம்பளமின்றிக் கட்டுப் பட்டு வேலை செய்ய வேறு வேலையாள் கிடைக்கமாட்டாது என்பதனால்தான் கிழவன் மணவினைக்கு உறவினர் இசைந்தனர் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
பெண்ணினமும், ஆணினமும் சேர்ந்தே சமூகம் எனப் படுகிறதாயினும், அந்தச் சமுகத்திற்குப் பெண்களைப் பலி கொடுக்கப் பெண்கள் தயங்குவதில்லை என்று கண்டாள் தர்மா
ஒருநாள் தர்மா தன் கணவனிடம் தனக்கு ஏதாவது நகைநட்டுச் செய்து போடும்படி கேட்டாள். வேறெதிலும் புதுமைக் கருத்தை நாடாத கிழவருக்கு அப்போது புத்தறிவு தோன்றிற்று. “அழகு என்பது இயற்கையானது. செயற்கையாக அணிமணி போடுவதெல்லாம் வீண்" என்றார் அவர்.
தர்மா: அப்படியானால் மண விழாவிற்கு நகைகளை ரவலாக வருந்தி வாங்கி ஏன் போட்டீர்கள்?
சங்-நா: பொதுமக்களையும் சமூகத்தையும் திருப்திப் படுத்தத்தான்.
தர்மா: அந்தத் திருப்தி இப்போது வேண்டாமா?
சங்-நா: இதென்ன பைத்தியக்காரி மாதிரி பேசுகிறாய். மணவிழா நடப்பது பொதுமக்களுக்காக; வாழ்வதும் தாழ்வதும் நம் பாடு.
தர்மாம்பாள் பகுத்தறிவுக்கு அவள் கேள்விகளாலும் அனுபவங்களாலும் பிறருக்கு ஏற்படாத தெளிந்த அறிவு ஏற் பட்டு வந்தது. ஒருநாள் இன்றியமையாத அவளைக் கூட்டிக்