காதல் மயக்கம்
66
179
கொண்டு சங்கரநாராயணன் வெளியூர் போய் வரவேண்டி யிருந்தது. புகைவண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காத்து நின்றபோது நிலையத் தலைவர் அவரை நட்புரிமையுடன் நலம் விசாரித்தபின் தர்மாவைக்கண்டு துதான் உங்கள் பேத்தியோ" என்றார். இவ் மதிப்பைப் பெறாமல் சங்கர நாராயணன் அவளை இழுத்துக்கொண்டு வண்டியேறி விட்டார். அதுமுதல் அவர் அவளுடன் பயணம் செய்வது மில்லை; வெளிச் செல்வதுமில்லை.
சமூகத்தின் கட்டுப்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த அறிவு கூர்மையுள்ள தர்மா பின்வாங்கவில்லை. வேலை வாங்குவதும் பணப்யைச் சுருக்கிக்கொள்வதும் தவிர வேறு கணவன் கடமைகளை எதுவும் அறியாத சங்கர நாராயணன் அவளைத் தனிமையில் அணுக முயன்ற போது விலாங்கு போல் நழுவியும் முயல்போல் குதித்தோடியும் மேஜை, நாற்காலிகளை இடையே யிட்டுத் தட்டு மறித்தும் தன் பெண் ணுரிமையைக் காக்க அவள் முற்பட்டாள். தான் கூண்டுக்குள் அகப்பட்டகிளியைத் தாவிப்பிடிக்க வலியற்ற கிழவன் என்று தன் பிள்ளைகளிடம் கூடக் கூற முடியாமல் தத்தளித்தான் சங்கரநாராயணன்.
ஐம்பத்தைந்தாவது வயதில் சங்கரநாராயணனுக்கு வேலையினின்று ஓய்வு தரப்பட்டது. நான் இன்னும் வேலை யாற்றும் ஆற்றலுடையவனேயாதலால் வேலை நீட்டிப்பு வேண்டும் என்று அவன் எவ்வளவு வாதிட்டும் அரசியலார் இதனை ஏற்கவில்லை. அரசியலார் தீர்ப்பை அடுத்துச் சில ஆண்டுகளுக்குள் காலன் தீர்ப்பும் வந்தது. தர்மா அனாதை களாலயத்திலிருந்தும் துறக்கப்பட்ட அனாதை ஆனாள்.
பெண்களியக்கத் தலைவி ஒருத்தி தர்மாவிடம் வந்து ‘நீ ஏனம்மா இத்தகைய ஒரு நடைபிணத்தை மணக்க இணங்கி னாய்?' என்று கேட்டாள்.
தர்மா: அம்மா, இந்துவாய்ப் பிறந்தபின் ஆணே மணத் துக்கு இணங்க வேண்டுமென்பதில்லை. அடிமை இந்துவின் அடிமையாகிய பெண்ணின் இணக்கத்தை யார் கேட்கிறார்கள்.
பெ. இ.த: இணங்க மறுத்தால் என்ன?