உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

அப்பாத்துரையம் - 25

தர்மா: அடிமைச் சமூகத்தில் அடிமைக்குப் பிறந்து அடிமைக்கு வாழ்க்கைப்படவிருக்கும் அடிமை மறுப்பதெப்படி?

பெ. இ.த: அப்படியானால் மணமே வேண்டாம் என்று கூறலாம் அல்லவா? ஒருவரும் எதிர்க்காவிட்டால் அடிமை நீடிக்கத்தானே செய்யும்.

தர்மா: ஆம். ஆனால் உலகைத்திருத்தும்படி தன்னை அழிக்க யார் விரும்புவார்கள். தானே அழிந்தால் புகழ் வரும் அல்லது இகழாவது இராது. உலகத்துக்காகத் தம்மை அழிப்ப வர்களுக்கு அடிமைச் சமூகம் இருக்கும் வரை இகழ்தானே கிடைக்கும்.

பெ.இ.த: வாழ்க்கையையே துறக்க வேண்டிய போது இந்த இகழ் அச்சத்தை ஏன் துறக்கக் கூடாது? போகட்டும். போனதெல்லாம் போகட்டும். விதவைகளில்லங்கள் எத் தனையோ இருக்கின்றனவே. சமூகத்தை ஒழித்துவிட்டு இனி யாவது வெளிவந்து அவற்றில் சேர்ந்து தொண்டாற்றலாமே!

தர்மா: அதுவும் என்னால் முடியாது!

பெ. இ.த: ஏன்? எத்தனையோ பெண்கள் அவ்வாறு செய்துள்ளார்களே!

தர்மா: என் ஊரிலோ, என் குடும்பத்திலோ யாரும் அப்படிச் செய்யவில்லை. அதில் முதல் ஆளாயிருக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் விதவையென்ற காரணத்துக்காக இவ்வழகிய கேசத்தை ஒழிக்கவும் விருப்பமில்லை.

பெ. இ.த: பின் என்னதான் செய்யப்பொகிறாய்?

தர்மா: இதுவரை பலியாயிருந்தது போலவே இறுதிவரை இச்சமூகத்துக்கு நான் பலியாகப் போகிறேன். வேண்டா வெறுப் புடன் கேசத்தை ஒழித்து, சமூகத்தின் மூதேவியாய் மொட்டை யடித்து வெள்ளாடை உடுக்கப் போகிறேன். இதைத் துறக்கும் விருப்பமிருந்தாலும் துணிவில்லை.

துணிவு என்றுவரும், யாருக்குவரும் என்றுகேட்க எண்ணி னாள். பெண்கள் இயக்கத் தலைவி, ஆனால் கேட்கவில்லை.