உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

மனைவியும் ஒருவருக்கொருவர் மனங்கோணாமல் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

183

ல்

பார்வதிக்கு வயது பதினேழாவதற்குள் அவள் ஒரு குழந்தைக்குத் தாயானாள் அவளையொத்த பெண்களிடையே இது அவள் மதிப்பை உயர்த்திற்று. அவள் குழந்தை யின்பத்தில் திளைத்தாள். இக்குழந்தையை அடுத்தடுத்து அவள் பல பிள்ளைகளைப் பெற்றாள். நாற்பதாவது வயதில் அவள் பதினான்கு பிள்ளைகளைப் பெற்றிருந்தாள். இவற்றுள் இறந்துபோன ஆறு குழந்தைகள் போக, அவளுக்கு மூன்று ஆண்களும் ஐந்து பெண்களும் இருந்தனர்.

முதல் நான்கு பிள்ளைகள் பிறக்கும்வரை பார்வதிக்குக் குழந்தை பெறுவதில் பெருமையும், குழந்தைகள் வளர்ப்பதில் இன்பமும் குறையாதிருந்தது. ஆனால் குழந்தைகள் அதிகமாக ஆக வறுமை அதிகரித்தது. வறுமை அதிகமாக ஆகக் குழந்தை களும் அதிகரித்தன. குழந்தைகளுக்கு உணவில்லாததுடன் தாய்க்கும் உணவில்லாத காரணத்தால் கைக்குழந்தைகள் கூடத் தாய்ப்பால்இன்றித் தவித்தன. வறுமையாலும் தாயின் உடல் நோயுற்றதாலும் பிள்ளைகளும் நோய்க்காளாயின. இறந்தவை போக இருப்பவையும் சாகமாட்டாச் சாவாகவே வாழ்ந்தன. இந்நிலையில் பார்வதி ஒவ்வொரு குழந்தைப் பேற்றையும் ஒரு புதுநரகவாழ்வாக எண்ணிப் பதைத்ததில் வியப்பில்லை. குழந்தைகள் தொல்லைகள் பொறுக்கமாட்டாமல் அவள் தாயன்புகூட வற்றிவிட்டது. சில சமயம் அவள் தன் மனமார் அவற்றை வைது அடித்து ஒறுக்கவும் தொடங்கினாள்.

இத்தனை இன்னல்களுக்கடையில் தன் நாற்பதாவது வயதில் பதினைந்தாவதாக ஒரு பிள்ளை வரப்போவது கண்டு அவள் நெஞ்சம் கலங்கினாள். ஆனால் அம்பி அவளுக்கு ஆறுதல் கூறினான். “நாம் என்ன செய்யலாம் பாரு.எல்லாம் தெய்வச் செயல். நம்மாலாவது யாதொன்றும் இல்லை” என்று அவனும் உடனிருந்து புலம்புவான். பாருவும் வேறுவகை தெரியாது தெய்வத்தை நோக்கி, "ஆண்டவனே, எனக்கு இருக்கும் பிள்ளைகளும் அவற்றின் தொல்லைகளும் போதாதா? எங்கள் வறுமைக்குழிக்கு இன்னும் ஒரு பிள்ளை தருவானேன்.

ம்