உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

அப்பாத்துரையம் - 25

இனியாவது எனக்குப் பிள்ளையில்லா வரன் தந்தருளக் கூடாதா?” என்று வேண்டிக் கொள்வாள்.

பிள்ளைவரம் கேட்பதற்கு மாறாகப் பிள்ளையில்லாவரம் கேட்கும் பார்வதியின் செயல் அம்பிக்குப் பிடிக்கவில்லை. "பிள்ளை வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்பது கூட தவறு. தரவேண்டாம் என்று கேட்பது பின்னும் கேலிக்கூத்து. உண்மை யில் கடவுள் நம் விருப்பத்துக்காக எதுவும் தருவதில்லை. நம் விருப்பத்துக்காக எதுவும் நிறுத்தவும் மாட்டார். அவர் தமக்கு நன்மை என்று தோன்றுவதைச் செய்கிறார்' என்று அவன் அவளைக் கடிந்து அறிவுரை கூறுவான்.

பாரு : செல்வமிகுதியுடைய பலர் விரும்பி விரும்பித் தவங்கிடந்தும் பிள்ளைகள் தராமல் வறுமையில் வாடுப் வர்களுக்கு வேண்டாத பிள்ளைகளை வழங்குவது எப்படி நன்மை?

அம்பி: கடவுள் தருவது அவரவர் தகுதிப்படியே. ஒவ் வொருவர் நன்மையும் திமையும் அவரவர் முன்வினைப் பயனுக்குத் தக்கபடி அமைகிறது. அப்பயனைத் தான் தெய்வம் கொடுக்கிறது.

பாரு: அப்படியானால் தெய்வச் செயல் என்று கூறுவா னேன். வினைப்பயன் என்பதுதானே. பிள்ளை வேண்டியவர் களுக்கு இல்லாது போவதும், வேண்டாதவர்களுக்கு வலிய வருவதும் இரண்டும் ஒரே தீவினையின் பயன்தானோ?

அம்பி: தனிமனிதன் தன் வினைப்பயனை அடைகிறான். ஆனால் உலக நன்மையை எண்ணிக் கடவுள் செயலாற்றுகிறார். அவ்வகையில் வினைப்பயன்களைத் தகுதியறிந்து மாற்றுகிறார். அவர் செய்வ தெல்லாம் உலக நன்மைக்கே.

பாரு :

பிள்ளைகளை அதிகமாகக் கொடுத்து அவர்களைப் பட்டினி போடவைப்பதும் உலக நன்மைக்காகத் தானா?

தான்.

அம்பி: ஆம் அப்படித்தானிருக்க வேண்டும்.

பாரு: இது விசித்திரமான புதிராயிருக்கிறதே.

அம்பி: தெய்வச் செயலின் போக்கே விசித்திரமானது