188
அப்பாத்துரையம் - 25
தான் நடப்பது நிலத்திலா, வானிலா என்றறியாது நடந் தாள் பார்வதி. கணவன் கூறிய ‘நம்தர்மம்' இதுதான் போலும் என்று அவள் எண்ணிக் கொண்டாள்.
மறுநாள் பார்வதி தன் எட்டுப் பிள்ளைகளுடனும் திருமதி சர்வோபகாரி யம்மையார் வீட்டுக்குச்சென்றாள். முன் அவளைக் காணச்சென்ற பொதுவிடத்தைவிட அவளுடைய வீடு பரந்தகன்று ஆடம்பரமிக்க தாகவே இருந்தது. வரவேற்பும் முந்திய தடவைபோல் எளிதாயில்லை. ஏழைகளுக்கே உ உழைப்ப வர்கள் எப்படி இவ்வளவு ஆடம்பரமாயிருக்கக்கூடும் என்று பாரு ஒருகணம் நினைத்தாள். அடுத்கணம் அது நன்றிகெட்ட எண்ணமென்று அகற்றிவிட்டுப் பணிவுடன் அவள் அம்மையாரை அணுகினாள். அவளைச் சூழ்ந்து அரிசி குறுணை நொய்கள் போல் நின்றிருந்த பிள்ளைகளை திருமதி சர்வோபகாரி அம்மையார் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு “இதெல்லாம் உண்மையிலேயே நீ பெற்ற பிள்ளைகள் தானா, அல்லது இங்கே காட்டுவதற்காகச் சேர்த்துக்கொண்டு வரப்பட்டவர்களா?” என்று கேட்டாள்.
தன்னைப் பிச்சைக்காரியென்று மட்டுமின்றித் திருடி யாகவும் மதித்துக்கேட்கப்பட்ட இக்கேள்வியைச் செவி யேற்றதும், பார்வதி சினங்கொண்டு, "உங்கள் பிச்சையும் வேண்டாம், இந்தத் திருட்டுப் பட்டமும் வேண்டாம்” என்று சரேலென வெளியேறினாள். அதுகண்டு திகைத்த பரோப காரியம்மையார் நயமான குரலில் “கோபப்படாதே யம்மா, எத்தனையோபேர் ஏமாற்றியதனால் உன்னையும் இனமறி யாமல் சொல்லிவிட்டேன். இதோ உன் பிள்ளைகளுக்கு உதவி வாங்கிப் போ" என்றாள்.
பார்வதி ஒருகால் வெளியிலும் ஒருகால் உள்ளுமாக நின்றாள். பரோபகாரி அம்மாள் உரத்த உத்தரவிட, அதன்படி பணியாள் ஒருவன் ஒரு பையைக்கொண்டு வந்தான். அதிலிருந்து அவள் (பிள்ளைக்கு ஒரு ரூபாய் என்று கணக்கிட்டு பதினைந்து ரூபாயை எடுத்து அவளிடம் உரக்க ஒன்று, இரண்டு எனப் பதினைந்துவரை எண்ணிக் கையில் போட்டுவிட்டு, இதோ இந்தப்பதினைந்து ரூபாயையும் இப்போதைக்கு உன் பிள்ளைகள் செலவுக்காக வைத்துக்கொள். மிகவும் முடைப்பட்டால்