உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

203

கண்டாள். இந்துவாயிருந்த ஒருத்தியை மணக்கத் தடைசெய்த அதே கிரித்தவக் குருக்கள் கிரிஸ்தவனாகிய அவன் மணந்தபின் குடிப்பதையோ முன் போலக் கூத்தியார், காதலிகளுடன் ஊடாடுவதையோ தடைசெய்யமுடியவில்லை. கணவனுக்கு அவள் அழகு சிலநாளில் கைத்துப்போய்விட்டது. ஆனால் அவன் வாழ்க்கையைத் திருத்தமுடியாத குருக்கள் அவள் பழகிய இந்து சமயப் பாடல்களைக் கண்டித்து, தன் கிரித்தவர் குடியிருப்பிலிருப்பவர்கள் அப்பாட்டுக்களைப் பாடினால் துரத்திவிடவேண்டிவரும் என்றுமட்டும் அச்சுறுத்தினார்.

புகைவண்டியில் தான் கண்ட அரசி கூறிய சோகமொழி கள் இப்போது அவள் காதில் புதுப்பொருளுடன் ஒலித்தன. "மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான்” ஆம். எப்போதும், எல்லா வாழ்க்கைப்படி களிலும், எல்லாச் சமயங்களிலும் அப்படித்தான் என்பதை இப்போது அவள் கண்டாள். இனி அவள் காணவேண்டும் உண்மை ஒன்றே ஒன்றுதான். பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கு ஒரே ஒரு விடுதலை - அது தான் சாவு. அவ்விறுதி விடுதலையை நாடுமுன் தமக்கையைக் காண்போம் என்று அவள் எண்ணி னாள். உடன் பிறந்த பாசம் எந்நிலையிலும் பாதுகாப்பளிக்கும் என்று நம்பினாள்.

ஆனால் உமாவைவிடக் கல்யாணிக்குப் பொறாமையும் றுமாப்பும், தன்னலமும் நெருங்கிய உடன்பிறப்புக்கள். அவள் தன் தங்கையைக் கண்ணெடுத்துப் பார்க்கவும் மறுத்தாள். சமயமும் ஒழுக்கமும் கெட்ட துரோகி, என் கண்ணில் விழியாமல் போய்த் தொலை' என்றாள் அவள்.

"நான் வேண்டுமென்று கெடவில்லையே. சூழ்நிலைகள் என்னைக் கெடுத்தன. என்னைச் சமயம் மன்னிக்காவிடினும் உடன்பிறந்த நீ மன்னிக்கக்கூடாதா? என்போலப் பெண்ணாய்ப் பிறந்த நீ மன்னிக்கக்கூடாதா?'

'உன்னை மன்னிப்பவர்தாமும் நரகம் அடைவார்கள். பாவிக்கு யாரும் இரங்கமாட்டார்கள்' என்றாள் கல்யாணி.