உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

||-

அப்பாத்துரையம் - 25

செய்தவர்களுக்கு ஆதரவு செய்யவும் தன்னையே பழிக்கவும் காத்திருந்ததை அவள் கண்டு புழுங்கினாள்.

கல்யாணியும் சில சமயம் அவள் கணவனும் அவளுடன் பிறர் பரிமாறுவதுண்டு அவளைக் கடிந்துகொள்வார்கள். அவளோ 'பிறர் மனமறிந்து செய்யும் பழிக்கு நான் என்ன செய்வேன்' என்பாள். அவர்களோ 'நீ என்ன செய்வாயோ? இப்படிபுதுப்பெண்போல் சிங்காரித்துக் கொண்டிருந்தால் அது அவர்களை அழைப்பதுபோலத்தானே. அதற்குத்தான் தலையை மொட்டையடித்து வெள்ளாடையணிவது' என்பர்.

'மொட்டையடிப்பவர்கள் தீய வழியில் செல்வதில்லையா? ஒருவர் வயதையும் பருவத்தையும் மொட்டையும் வெள்ளை யாடையும் தடுத்துவிடுமா' என்று அவள் கேட்பாள். அப்போது அவர்களுக்குக் கோபம் மூக்கைமுட்டிவிடும் ‘இப்படி நாத்திகம் பேசுபவர்கள் ஒழுக்கக் கேடு அடைவதில் என்ன வியப்பு?' என்று முன்னிலும் வன்மையாக அவளை அவமதித்து நடத்தினர்.

நொந்த அவள் மனத்தின் போக்குக்கண்டு இன்சொல்லும் ஆறுதலுரையும் கூறிக்கொண்டே சூதுவாதற்ற அவள் உள்ளத்தில் கல்யாணியின் மோட்டாரோட்டி 'ஜேக்கப்' இடம் பெற்றான். அவன் மற்றவர்களைப்போலத் தன் உணர்ச்சியை வெளிக்காட்டாமல் நயவஞ்சகத்துடன் நண்பன்போலவே நடந்ததால் அவளையுமறியாமலே அவள் உள்ளம் அவன்பால் ஈடுபட்டது. அவள் மனதையறிந்து அவன் பக்குவமாக அவளைத் தன் வயப்படுத்தினான். அவனுரைப்படி அவள் அவனை மணந்து கொள்ள இணங்கி அவனுடன் வெளியேறிவிட்டாள்.

னால் அவன் கையில் அவள் சிக்கியபின் அவள் கிரிஸ்தவ சமயம் சாராமல் கிரிஸ்தவனான தன்னை மணக்க முடியாது என்று அவன் கூறினான். எல்லாச் சமயமும் ஒன்றே என்று தன்னைத் தேற்றிக்கொண்டு உமா அவனைப்போலக் கத்தோலிக்க கிரித்தவ சமயம் தழுவி அவனை மணந்து கொண்டாள்.

எச்சமயமும் ஒன்றே என்பதை அவற்றைப் பின்பற்றும் மக்கள் அவற்றைத் தீமைக்குப் பயன்படுத்தும் பண்பிலும் உமா