உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காதல் மயக்கம்

201

சமயத்தின் பேரால் உறவினர் கணவனாதரவற்ற அவளைத் தாமும் விலக்கியது இன்னொரு புறமுமாக அவளை வாட்டி வதைத்தன.

கணவன் இறவாவிடினும், அவள் அவனைத் துறந்ததனால் கைம்பெண்போன்றவளேயானாள். ஆகவே அவள் முடி களைந்து, வெண்புடவை அணிந்து கைம்பெண் கோலம் கொள்ளவேண்டும் என்று கல்யாணியும் அவள் கணவனும் வற்புறுத்தினர். உமா இதை மறுத்து விட்டாள்.

ரண்டாண்டுகள்கூட மணவாழ்வின்பத்தை முட்டில் லாமல் துய்க்காத உமாவின் மனம் கைம்பெண் வாழ்வை முற்றிலும் ஏற்கவில்லை. அதேசமயம் அவள் தன் மதிப்பு அவளை நன்னெறியினின்றும் விலகவும் விடவில்லை. இந்து சமயம் தன்னைக் கைம்பெண்ணாக்க உதவியதுடன், மறு மணத்தைத் தடுத்துக் கைம்பெண்ணாகவே வைத்திருக்கிறது என்பதை அவள் எண்ணி உள்ளமழிவாள். ஆனால் அதே இந்து சமயத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவள் நிலையறிந்தும், அவள் கடமை யுணர்ந்தும், அவள் பக்கம் நாடி மொய்ப்பதையும் அவள் கண்டாள். தன் நேரிய இன்பவாழ்வைக் கெடுக்கும் இதே சமயம் அவர்கள் நேர்மையற்ற இன்பவேட்கையைமட்டும் தடுக்காத தேனோ என்று அவள்சிந்திப்பாள். 'பெண்களின் ஒழுக்கம் பற்றி இவ்வளவு பேசும் சமூகத்தில் - நேரான வழிவிட்டு என்னைக் கெடுக்க இளைஞர்களுக்கு இடம் கொடுக்கும் சமூகத்தில், என்னை மணந்துகொள்ளும் துணிவும் நேர்மையும் உடைய இளைஞன் மட்டும் ஏன் இருக்கக் கூடாது” என்று ஏங்குவாள். 'இந்நாட்டில் காமம் மலையளவு; காதல் கடுகளவேனும் கிடை யாது.காமத்துக்குச் சமூகம் இடம் வகுக்கிறது; காதலுக்குத் தடை போடுகிறது' என்று நொந்துகொள்வாள்.

அவள் எண்ணங்களுக்குச் சான்றுப் பாத்திரங்கள் போல் கையொப்பமிட்டும் இடாமலும் எண்ணற்ற காதல் கடிதங்களும் அவளுக்கு வந்தன. சிலர் துணிந்து கடிதம் வந்ததா என்று கேட்கவும், சிலர் குறிப்பாகப் பார்க்கவும் பேசவும் சுற்றிச்சுற்றி வரவும் செய்தனர். இத்னையையும் தூண்டி விடும் சமூகம் குற்றம்