26
அப்பாத்துரையம் - 25
படிப்பதில் செல்வி யூஷ்டேஷியா எவருக்கும் இளைக்க வில்லையே. அவளுக்கு என்ன குறை?” என்றான் அவன்.
“படித்தமட்டில் குறை இல்லாமலில்லை. படித்ததனால் தான் இத்தனை மாயக்கற்பனை முட்டாள்தனங்களைத் தலையில் சுமந்து திரிகிறாள். படித்திராவிட்டால் அவள் விரும்பிய வாழ்வுக்கு நன்றாயிருக்கும்" என்ற பேச்சுடன் வை வீட்டிற்கு வந்துவிட்டார்.
மற்றும் இரண்டு குரல்கள் தம்மில் பேசிக்கொண்டது அவள் கருத்தைக் கவர்ந்தது. அதில் கிளிமின் பெயருடன் அவள் பெயர் இணைக்கப்பட்டது. நம் யூஷ்டேஷியாவும் நல்ல இணைதுணைகள் என்றுதான் தோன்றுகிறது. இருவரும் நூல் படித்தவர்கள். இருவரும் நுணுகிய நய நாகரிகம் உடையவர்கள். இருவருக்கும் உயர்ந்த கொள்கை. குடும்பத்திலும் கிளிம், யூஸ்டேஷியாவுக்கு இணையென்றுதான் சொல்ல வேண்டும். அவள் தந்தை ஒரு பெருநிலக்காரன் மட்டுமேயானாலும், தாய்நகர்ப் பண்புடையவள். இவ்விருவரும் மணவினையில் பிணைக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
ஏற்கனவே பாரிஸிலிருந்து வருகிறவன் என்ற சொல் கிளிம்மீது யூஸ்டேஷியாவின் கவனத்தை இழுத்திருந்தது. இப்போது அவன் பணமும் குடியும் யாவும் பிறரால் தன்னுடன் ஒப்பிடப்படுவது கேட்க, அவள் முழுவேகத்துடன் அவன் கற்பனை உருவுடன் ஆர்வம் கொண்டாள். தன் குடும்பம் தனித்தே வாழ்ந்ததனாலும், புளும்ஸ்எண்டிலுள்ள யோப்ரைட்களுடன் பழகாததனாலும் அவன் வரவேற்பில் அவனுடன் கலந்து கொள்ளவோ அவனைக் காணவோ தன்னால் முடியாமற் போய்விடுமோ என்று அவள் கவலைகொண்டாள். அவள் பகல் சிந்தனை முழுதும் ரவுக்கனவு முழுவதும் இப்போது கிளிம்பற்றியதாகவே இருந்தது. மாலை உலாவச் செல்லும் போதெல்லாம் அவள் கால்கள் பெரிதும் புளும்ஸ் எண்ட் பக்கமே சென்றன.
யூஸ்டேஷியாவின் உள்ளத்தில் முன்பெல்லாம் வில்டீவைப் பற்றிய எண்ணங்களும் கனவுகளுமே வேர்க் கொண்டிருந்தன. இப்போது கண்காணாக் கிளிம்மின் புத்தவா ஆர்வம் வளர வளர, பழைய வடிவம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.