உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 25

அவன் சென்றது திருமதி யோப்ரைட்டுக்குப் பிடிக்க வில்லை. கயிறு கேட்கவந்த சிறுவனைத் தனக்குள் தூற்றினாள்.

வாளியை எடுக்க ஒரு தடவை கயிறு கிணற்றில் ஆழிக் கரண்டியுடன் தாழ்த்தப்பட்டது. வாளி கரண்டியுடன் வந்தது. ஆனால் நீர் மட்டத்துக்கு மேலேறியதும் கயிறு இற்று அது மீண்டும் விழுந்துவிட்டது. இதற்குள் இழுப்பவர், கயிற்றைத் தாங்குபவர் சோர்ந்துவிட்டனர். இரண்டாவது தடவை கிளிம் தானும் உதவுவதாக முன்வந்தான். கயிறு அவன் வயிற்றைச் சுற்றிக் கொண்டு செல்வதுகண்ட ஒரு பெண் குரல் மாடியிலிருந்து "அவரைச் சுற்றிக் கயிறு அது ஆபத்து” என்று கூவிற்று. எல்லோரும் அப்பக்கம் திரும்பிப் பார்த்தனர். கிளிமும் பார்த்தான். அது யூஸ்டேஷியாவே. அவன் மீதுள்ள பற்றாலும் கவலையாலும் அவள் தன்னை மறந்திருந்தாள்.

66

-

கயிறு வயிற்றிலிருந்து இடுப்புக்கு இறக்கிச் சுற்றப்பட்டது. அத்தடவை வாளி வரவில்லை. மறுதடவை இன்னொருவர் உதவியுடன் வாளி எடுக்கப்பட்டது.

வாளி எடுக்கப்பட்டாலும் அது அன்று பயன்படாதென்று கண்ட கிளிம் புளும்ஸ்எண்டிலிருந்து இரவு காலத்துக்குத் தண்ணீர் கொண்டு கொடுக்கும்படி ஆளனுப்பினான். அச்சமயம் யூஸ்டேஷியா அவனைக் கனிவுடன் நோக்கினாள். அவன் ஒருகணம் நோக்கினான். புதர்நிலச் சமூகத்தின் மூடநம்பிக்கைக்கு ஆளான அணங்கு என்ற எண்ணத்துடன் அவள் அழகும் அன்றுதான் கண்ட அன்புக்குணமும் அவனை ஈர்த்தன. அவள் மீது தப்பெண்ணமில்லாத எவர் கண்ணுக்கும் அவள் அன்று என்றையும்விட ஒப்பற்ற தேவியாகவே தோற்றியிருப்பாள். கிளிமுக்கோ அவள் அன்று தன் உயர்கல்விக் குறிக்கோளுடன் சரிசமமாக அவன் உள்ளத்தில் குடிகொள்ளத்தக்க குறிக்கோள் பெண்மையாகத் தோற்றினாள்.

எல்லோரும் போய்விட்டனர். கிளிம் வாளிபற்றிய பேச்சிலிருந்து தொடங்கிப் பலவும் பேசிக்கொண்டே நின்றான். பின் தன் வீட்டிலிருந்து தண்ணீர் வரும்வரை உதவத் தானே நீர் இறைப்பதாகச் சொல்லிக் கிணற்றண்டை போனான். கயிற்றின் நுனியை அவன் கட்டிவிடுமுன் யூஸ்டேஷியா வாளியை எடுத்துக் கிணற்றுள் கயிற்றினுடன் தாழ்த்தினாள். “கயிற்றைத் தொடாதே"