தாயகத்தின் அழைப்பு
41
என்று அவன் எச்சரித்தான். ஆனால் கயிறு தாழத்தாழக் கனம் மிகுதியாகவே, அவள் "என்னால் பிடிக்க முடியவில்லை” என்றாள். அவன் உடனே கயிற்றை இழுத்துக் கட்டினான். அந்த நேரத்தில் அவன் கையைக் கயிறு அறுத்து இரண்டாம் முறையும் காயம் உண்டு பண்ணிற்று. அவள் அதைக் கைக்குட்டை கொண்டு கட்டிக்கொண்டே “ஏன் கயிற்றை விட்டுவிடுவது தானே?” என்றாள்.
66
கயிற்றை விட்டுவிடாதே என்று நீங்கள் தானே சொன்னீர்கள்” என்றான் அவன்.
அவன் சொல் அதற்குள் அவளுக்கு மறைமொழியாயிற்று. அவர்கள் உள்ளப் பிணைப்பை இது வலுப்படுத்திற்று.
கிளிம் தன் மனத்திலுள்ளதையெல்லாம் அவளிடம் கொட்டலானான். அவள் கருத்தில் சிலவற்றைத் தான் ஏற்க முடியவில்லை என்பதை அவன் ஆர்ந்தமைந்த அறிவு காணமுடிந்தது.ஆனால் காதலார்வம் அவன் அறிவையும் இனிய அன்புத்திரையில் மூடிற்று.
அவள் புதர்க்காட்டின் இயற்கையழகில் ஈடுபட்டாள். அவள் அதில் திரிந்ததுண்டு. ஆனால் அதை வெறுத்தாள். அவன் புதர்க்காட்டு மக்கள் நிலையை உயர்த்தப் பாடுபட விரும்பினான். அவர்கள்மீது தன் மனித இனப்பற்றைச் சொரிந்தான். அவள் அம்மக்களை மனமார வெறுத்தாள்.
அவன் பாரிஸையும் பகட்டையும் வெறுத்துப் புதர்க் காட்டிலேயே நிலையாக வாழ்ந்து அதன் பணிக்காகத் துன்பங் களையும் எளிய வாழ்க்கைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள விரும்பினான். அவள் புதர்க்காட்டு வாழ்வை நரகமெனக் கொண்டு கூடிய விரைவில் பட்மத்திலோ முடியுமானால் பாரிஸ் போன்ற நரகங்களிலோ சென்று நாகரிகப் பகட்டுவாழ்வை நுகரக் கனவுகண்டாள்.
ஆயினும் அவன் தன் குறிக்கோளை அவள்மூலம் நிறைவேற்றத் திட்டமிட்டான்.
அஃதறிந்தும், அவன் மனத்தை மாற்றி, பாரிஸறிந்த அவனுடன் பாரிஸுக்கோ, பாரிஸ் வாழ்வுக்கோ அவனை இட்டுச்செல்ல அவள் திட்டமிட்டாள்.