48
||-
அப்பாத்துரையம் - 25
மன்னிப்புக் கோருவதாக இருந்தான். அதற்கிடையில் நடந்த பூசல்கேட்டு அவன் அது மனைவியின் குற்றமாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அத்துடன் அச்சமயம் பார்த்து யூஸ்டேஷியா பாரிஸுக்கு எப்படியாவது என்றாவது போகவேண்டுமென்று வற்புறுத்தினாள். மணத்துக்கு முன்னைய தன் உறுதியை அவள் மீட்டும் சுட்டவே. அவன் மனைவிக்குரிய காதல் உரிமையை எண்ணிப் புழுங்கினான்.
அடுத்தநாள் தாம்சினுக்குப் பொன்னைப்பற்றிய முழு விபரமும் தெரிந்தது.
அவள் உடனே கிளிம்மிடம் சென்று மன்னிப்புத் தெரிவித்து, அவன் பங்கைக் கொடுத்துவிட்டாள். ஆனால் அதற்குள் இச்சிறு தடுமாற்றம் இதனைப் போலப் பல மடங்கு பொன்னாலும் பெறமுடியாத குடும்ப அமைதியைக் குலைத்து விட்டது.
ய
நிலைமை வேறு இருவகைகளிலும் மோசமாகி வந்தது. கிளிம்மின் பணம் யூஸ்டேஷியாவின் பகட்டிலும் அவர்கள் இன்பவாழ்விலும் கரைந்தது. வறுமை அவர்களை வாட்டிற்று. அதற்கிடையில் கல்விக் குறிக்கோளில் கருத்தூன்றிய கிளிம் இரவுபகல் படித்ததில் கண்பார்வைக்கு இடையூறு நேரத் தொடங்கிற்று. மருத்துவர் படிக்கக் கூடாதென்றார். சிலநாள் யூஸ்டேஷியா அவனுக்காகப் படித்தாள். சிறிதுநாள் கழிந்தபிறகு கூட மருத்துவர் நிலையாகவே படிப்புவேலை கூடாது என்று தெரிவித்து விட்டார்.
கல்விக் குறிக்கோளும் கெட்டது. அதுவகை அறிந்து தொழில்மூலம் பணம் நாடுவதும் கெட்டது. இருவரும் தத்தம் தாய்,பாட்டனிடமிருந்து பணம் கோருவதையும் விரும்பவில்லை. யூஸ்டேஷியா பாட்டனிடம் செல்வதைத் தடுக்க உடலுழைப்பை மேற்கொள்ள விரும்பினான். இதனால் கண்ணுக்குக் கேடில்லை; பணமும் சிறிது சிறிதாகச் சேர்க்கலாம் என்று எண்ணினான். அவன் புல்வெட்டும் தொழிலிலீடுபட்ட ஃவெர்வேயை யடுத்து அத்தொழிலைப் பழகினான். அதைப் பகல் முழுதும் செய்திவ ந்ததில் அவனுக்குச் சிற்றூதியம் கிடைத்தது. இதனால் உடலமைதியும் மன அமைதியும் கிடைத்தன. பாரிஸில் பயின்ற தன் கணவன் இழிமக்கள் வேலைசெய்து தன் மதிப்பையும் அவன்