4. குடும்பத் தொல்லைகள்
கிறிஸ்டியன் தான் செய்த மடத்தனத்தின் பிறகு எங்கும் தலைகாட்டவில்லை. பணம் உண்மையில் மீண்டும் உரிய இடத்தில் போய்ச்சேர்ந்தது அவனுக்குத் தெரியாது. தாம்சின் அவ்வளவு பெருந்தொகை கண்டு வியந்தும் கிளிம்மின் பங்கறி யாமல் அது தன் அத்தை மாமா ஆகியவர்களின் ஒன்றுபட்ட பரிசு என்று எண்ணி மனமார நன்றி தெரிவித்தாள். இதில் தற்செயலாகத் தொகை குறிப்பிடவில்லை. கிளிம்மிடமிருந்தும் இதுபோல நன்றிதெரிவிப்பு வரும் வரும் என்று அவள் ஆவலுடன் காத்திருந்தாள். இப்பணம்மூலம் கிளிம் தன் பெருந்தன்மையறிந்து மீட்டும் தன்னிடம் வருவான் என்றும் ஏழைத்தாய் கைப்பாசை கொண்டாள்.
மகனிடத்திலிருந்து செய்தி வராதது கண்டு திருமதி யோப்ரைட் வியந்தாள். மகனை அவன் வீட்டில் பார்க்க விரும்ப வில்லை. யூஸ்டேஷியா ஒருநாள் பாட்டன் வீடு வந்திருப்பதாகக் கேட்டு அவனை அங்கே கண்டு கேட்பதென்று புறப்பட்டாள்.
இருவருக்கும் தெரியாமல் இடையில் நிகழ்ந்த நிகழ்ச்சியால் ருவரை ஒருவர் அறியாமல், பழய பகைமையால் மாமியும் மருமகளும் புதுப்போராடினர். ஒருவரைப்பற்றி ஒருவர் கொண்ட ஐயங்கள், தப்பெண்ணங்கள் புதுப்பிக்கப் பட்டுப் பெருக்கி விடப்பட்டன. வில்டீவ் மனைவி, கிளிம்முக்குத் தரவேண்டிய பணத்தைத் தான் வாங்கித்தர, பழய காதலிக்குத் தானே கொடுத் திருக்க வேண்டும் என்றும் கிளிம் இதை அறிந்திராததால்தான் நன்றி தெரிவிக்கவில்லை என்றும், திருமதி யோப்ரைட் கருதியிருந்தாள். பேச்சில் அது தொனிக்கவே யூஸ்டேஷியாவின் சினம் அளவு கடந்தது.
நடந்த செய்தி எதனையும் கருதாது கிளிம் அன்று காலையில் அன்னையை மனைவியுடன் சென்று பார்த்து