இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
அப்பாத்துரையம் - 25
பார்த்துக்கொண்டிருந்த டிக்கரிவென் அவனை மீண்டும் பந்தயமாடவைத்தான். வில்டீவ் அத்தனை பணமும் தோற்ற பின் அவன் பணத்துடன் தாம்சினைத் தேடினான். பணத்தில் பாதி கிளிIனுடையது என்று அவனுக்குத் தெரியாது. ஆகவே கிளிமும் யூஸ்டேஷியாவும் மணவிழா விருந்து முடிந்துவருவது கண்டும் அதைக் கொடுக்கவில்லை. சிறிதுநேரம் சென்று தாம்சின் சார்லி ஓட்டிய வண்டியில் வருவது கண்டு அவளிடம் முழுத்தொகையையும் கொடுத்தான். தாம்சினுக்குக் கிளிமின் பங்குத்தொகை பற்றி எதுவும் தெரியாது.