உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தாயகத்தின் அழைப்பு

45

எண்ணினான். ஆனால் அவன் எவ்வளவு குறிப்பாகக் கேட்டும் காரியம் சாயவில்லை. அவன் கேட்காமலே நம்பாதிருந்த திருமதி யோப்ரைட், கேட்டபின் பின்னும் ஐயுற்றாள். தாம்ஸினின் காரியங்களைத் தாம்ஸினுடமே வைத்துக் கொள்வதாகக் கூறி அவள் அவனை மனக்கசப்புடன் அனுப்பினாள்.

வில்டீவ் போனபின் காண்டில்பாட்டன் பிள்ளையான கிறிஸ்டியன் வந்தான். திருமதி யோப்ரைட் கூடியவிரைவில் பணத்தை உரியவரிடம் சேர்க்க எண்ணியதால் அவனிடமே கொடுத்து, கிளிம்மிடம் ஐம்பது கொடுத்து, தாம்சின் ஐம்பது எடுத்துக்கொள்ளும்படி தாம்சினிடம் அனுப்பினாள்.கிறிஸ்டியன் புதர்க்காட்டு வழியில் செல்லும்போது ஆட்கள் வரவே, திருடர் என்று அஞ்சிப் பணத்தை இரு காலணிகளிலும் கொட்டிக் கொண்டான். வந்தவர்கள் அவன் ஊர் நண்பர்கள். அவர்கள் வற்புறுத்தலுக்கிணங்கி அவர்களுடன் பந்தய ஆட்டம் காணச்சென்றான். அது முடிந்தபின் அவன் அவசர வேலையாகத் தாம்சினைக் காணச்செல்வதால் தன்னுடன் யாராவது வரும்படிக் கோரினான். வேறு யாரும் வரவில்லை. வில்டீவ் உடனே வர ஒத்துக்கொண்டான். வெள்ளையுள்ளத்தானான கிறிஸ்டியன் வில்டீவிடமே தன்னிடம் அவன் மனைவிக்குரிய பொருள் இருப்பதைக் கூறினான். தன் மனைவியின் பணத்தைத் தர அவன் அத்தை தன்னை நம்பாமல், இந்த அயலானை நம்பியது கண்டு அவன் உள்ளுற வெம்பினான். அதை எப்படி யாவது தட்டிப்பறித்து அவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க எண்ணி அவன் வழியில் கிறிஸ்டியனிடம் ‘தனிப்பந்தய ஆட்டம் ஆடிவிட்டுச் செல்வோமே' என்றான். பந்தய ஆட்டத்தில் வரும் குருட்டு யோகம் பற்றிக் கதைகள் அளந்து அவனை இணங்கவும் வைத்தான். ஆனால் ஆட்டத்தில் அவன் கிறிஸ்டியனிடமிருந்த சிறுதொகையை வைத்துத் தோற்கவைத்ததுடன், ஆட்டவேகத்தில் தன் மனைவிக்குரிய பொற்காசையும் அதற்குமேல் கிளிமுக்குரிய காசையும் வைத்து இழக்கச்செய்தான். கிறிஸ்டியனுக்கு அதற்கு மேல்தான் தன் பிழை தெரிந்தது. ஆயினும் வேறு வகையின்றித் திட்டிக்கொண்டு போனான்.

வஞ்சனையால் பெற்ற பணத்தை எடுத்துக்கொண்டு அவன் போகுமுன், தாம்சின் பெயர்கேட்டு ஒளிந்துவந்து எல்லாம்