உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

-

அப்பாத்துரையம் - 25

அவன் எண்ணம் பஞ்சாய்ப் பறந்தது. அத்துடன் தாம்சினை மணக்கத் தனக்கு யூஸ்டேஷியா ஊக்கமளித்ததன் காரணமும் சட்டென அவனுக்கு விளங்கிற்று. இரு பெண்கள்மீதும் ரு கிளிம்மீதும் அவன் உள்ளம் தணலாகச் சீறி எழுந்தது.

திருமதி யோப்ரைட்டின் தனிமையிடையே ஒருநாள் தாம்சின் அவளைப் பார்வையிடச் சென்றாள். அவள் உடல் மெலிந்து காற்றிலாடும் சருகுபோல ஆடிற்று. மணவாழ்வு நலம்பற்றி வினவிய திருமதி யோப்ரைட்டுக்கு அவள் மழுப்பலாகவே விடை கூறினாலும் அவள் தோற்றம் அவள் மணவாழ்வின் போலித்தனத்தை எடுத்துக்காட்டிற்று. அதுமட்டுமன்று. அத்தையிடம் பணம் கோருமளவு அவள் வறுமையுள் தள்ளப்பட்டிருந்தாள். தனக்குக் கணவர் பணம் தரவில்லையென்றும், கேட்கத் தனக்குப் பரிதாபமாக இருப்பதாகவும் அவள் கூறினாள். திருமதி யோப்ரைட் “நான் பணம்தரத் தடையில்லை. ஆனால் கணவனிடம் பணம் கேட்காமல் இருக்கக்கூடாது.கேட்டுப் பார்த்தபின் நாளை வா, தருகிறேன்” என்றாள்.

உண்மையில் தாம்ஸினிடம் மட்டுமன்றிக் கிளிமிடமும் திருமதி யோப்ரைட்டுக்குக் கனிவு பிறந்திருந்தது. அவளிடம் அவள் குடும்பச் சேமப்பணமாக நூறு பொற்காசுகள் இருந்தன. அதைத் தர்மஸினிடம் கொடுத்து இருவரும் பங்கிட்டுக் கொள்ளும்படி கூற எண்ணியிருந்தாள். ஆனால் அவள், பணத்தை அவளிடம் கொடுக்குமுன், பணவகையில் கணவனை நம்பக்கூடாதென்பதை அவள் தெரிந்து எச்சரிக்கையாயிருக் கட்டும் என்பதற்காகவே, கணவனிடம் கேட்கும்படி தாம்சினைக் கோரியிருந்தாள்.

மறுநாள் திருமதி யோப்ரைட் எதிர்பார்த்தபடி தாம்ஸின் வரவில்லை. ஆனால் வில்டீவ் வந்தான். அவனுக்குப் பணத்துக்கு மிகவும் முடையாகவே இருந்தது. தாம்ஸினை அன்று வரவிடாமல் தடுத்தவன் அவனே. அவள் அத்தை வீட்டுக்கு முந்தினநாள்தான் வந்திருந்தாள். இன்று அடுத்த நாளே போக அவள் முனைந்ததும், அத்தை மருமகளுக்கு ஏதோ குடும்பப் பரிசு தர இருக்கிறாள் என்று ஊகித்தாள். அவளைத் தடுத்தபின் தான் போய் அவள் சார்பில் பெற்று விற்றுச்செலவு செய்துவிடலாம் என்று அவன்