தாயகத்தின் அழைப்பு
43
தற்சமயம் ஒரு தனிக்குடில் கட்டிக்கொண்டு மணம் செய்து கொண்டு அதில் சிறிது காலம் இருந்து, பின் உழைத்துப் பணம் சேர்த்து நல்ல வீடு செல்லலாம் என்பது அவன் திட்டம். இதை அவன் யூஸ்டேஷியாவுக்கு எடுத்துக் கூறி, மணஉறுதி கோரினான்.
அவள் விரும்பியது பாரிஸ்நகரவாழ்வின் பகட்டு. அவற்றைப்பற்றி அவன் பேசுவதைக் கேட்க விரும்பினாள். அவற்றில் பழகிய அவன் மூலம் அந்த வாழ்வைத் தானும் பெற அவள் விரும்பினான். ஆனால் அவன் விரும்பியது புதர்க்காட்டு எளிய வாழ்வு, அந்நில மக்கள் பணி, அதற்கான இடந்தரும் வாழ்க்கை. அவனைத் தன்னால் மாற்ற முடியவில்லையென்றும் அவள் கண்டாள். ஆயினும் நாளடைவில் அவனை ஏமாற்றித் தன் விருப்பங்களை நிறைவேற்ற அவள் எண்ணினாள். ஆகவே தன் விருப்பங்களை மட்டும் வற்புறுத்திக் கூறிக்கொண்டு அவள் இணங்கினாள். தன் குறிக்கோளை மட்டும் வற்புறுத்திக் கூறிவிட்டு அவனும் அவ்விணக்கத்தை ஏற்றான்.
தனிப்பட்ட சிறு குடிசை ஒன்றை அமர்த்திக் கொண்ட கிளிம் தன் பொருள்களை மூட்டைகட்டிக்கொண்டுபுறப்பட்டான். "வேறு வீடு செல்கிறேன், அம்மா” என்று அவன் கூறியபோது அவளும் “மூட்டை கட்டுவதிலிருந்தே அறிந்துகொண்டேன், போகிறாயென்று” என்றாள். ஆனால் அவன் போனபின் அவள் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.
புதுக்குடிசைகிளிமுக்கும் மிகவும் தனிமையாகத் தானிருந்தது. மணமாகும்வரை அதில் ஒரு அறையை ஒழுங்குசெய்து அதில் இருந்தான்.
விரைவில் அவர்கள் திருமணம் நடந்தேறியது. யாரும் திருமணத்துக்குச் செல்லவில்லை. திருமதி யோப்ரைட் வீட்டிலேயே இருந்தாள்.
'யூஸ்டேஷியாவின் திருமணம் நடைபெற்றது; அதுவும் கிளிம் யோப்ரைட்டுடன்' என்ற செய்தி வில்டீவின் காதுகளுக்குப் பேரிடியாகச் சென்றெட்டிற்று. அவர்கள் காதலைப்பற்றி இதுவரை அவன் எதுவுங் கேள்விப்படவில்லை. தர்மசினை மணந்தபின்னும் அது காரணமாக யூஸ்டேஷியாவின் பொறாமை தன்மீது அவள் காதலை வளர்க்கும் என்ற கயமைத்தனமான