54
அப்பாத்துரையம் - 25
மீகாமன் வை அதை அவள் அறையிலிருந்த மேசையில் வைத்தான். அவள் இரவு முழுதும் மூட்டை கட்டிப் புறப்பட ஏற்பாடு செய்வதும் அவனுக்குத் தெரியாது.
அன்று கடுமழை, புயல், மின்னல், அதையும் பாராமல் யூஸ்டேஷியா மூட்டையுடன் தான் குறிப்பிட்டபடி கல்லறை மாடத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்பே சென்று காத்திருந்தாள். உள்ளத்தில் புயல், சோர்வு. வெளியில் ஆடையெல்லாம் மழையில் நனைந்து புயலில் குலைந்தன. ஆனால் வில்டீவைக் காணோம். அவள் சீறினாள்; அழுதாள்; அரற்றினாள். நெடுநேரம் சென்றதும் இறங்கிப் புதர்வழி அவன் வீடு செல்லப் புறப்பட்டாள். இருட்டில் வழி தெரியவில்லை. மழை வெள்ளம் வழிகளை ஆறாக்கிப் புதர்க்காட்டைக் குளமாக்கியிருந்தது. தொலைவில் கானாற்றின் மதகு கல்லென் றிரைந்தது. அவள் மதிமயங்கினாள். எங்கே செல்கிறோம், என்ன என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அலைந்தாள்.
வில்டீவ் அன்று பகலே அவசர அவசரமாகத் தனக்குப் புதிதாகக் கிடைத்த செல்வத்தையெல்லாம் பொருளாகப் பத்திரமாக மாற்றுவதில் ஈடுபட்டிருந்தான். முன்னிரவிலேயே வண்டியையும் குதிரையையும் சட்டம் செய்து நிறுத்தியிருந்தான். எல்லாரும் உறங்கியபின் மூட்டை கட்டவேண்டியிருந்ததால் நேரமாயிற்று. மழை, புயலிடையே யூஸ்டேஷியா குறித்த நேரத்துக்கு முன்பே போய்க் காத்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. கணக்காகப் பதினொரு மணிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
தாம்ஸின் தன் மணவாழ்வைத் தன் மணவாழ்வல்ல வென்றும், கணவன் கணவனல்லவென்றும் எப்போதுமே நன்கு அறிந்தவள். டிக்கரி கூறிய விவரங்களாலும் கணவன் யூஸ்டேஷியா ஆகியவர்கள் போக்கினாலும் அன்று நடக்கும் செய்திகளைக் கிட்டத்தட்ட உள்ளபடி உணர்ந்துகொண்டாள். அவளிடம் அப்போது கைக்குழந்தை இருந்தது. அதனை முரட்டுத் துணிகளில் சுருட்டிக்கொண்டு கிளிம் வீட்டுக்குவந்து தன் நிலையையும் ஐயங்களையும் கூறி அவனை யூஸ்டேஷியாவையும் வில்டீவையும் பின்பற்றும்படி அனுப்பினாள். அதன்பின்னும் அவளால் கைகட்டிக்கொண்டு இருக்கமுடியவில்லை. மதலையை