68
அப்பாத்துரையம் - 25
அல்லது வேறுவகை உயர் நிலையோ எதுவும் கிடையாது என்று கூறி அவள் காதலைச் சோதிக்கத் தொடங்கினான்.
""
அப்புவினால் முழுவிவரமும் அறிந்த அப்பெண் “அப்படி யானால் நான் அச்சமின்றி என் காதலை வெளியிடலாம். அது வளர்வதற்கு இனித் தடையில்லை" என்றாள். சோதனையின் பயனாக வந்த எதிர்பாராத அவ் இனிய மறுமொழி அவனைச் சொக்கவைத்தது.
66
ஆயினும் அவன் காதல் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. மணவாழ்வில் ஈடுபடாத உங்கள் வகுப்பினருக்குக் காதல் என்பது பற்றி என்ன தெரியும்?" என்று அவன் வினாவினான்.
ஆனந்தி : மணவாழ்க்கையின் காதலெல்லாம் வெறும் கட்டுக் கோப்புத்தானே. உள்ளமும் உள்ளமும் ஒட்டும் காதலை வளர்ப்பது நாங்கள்தான்; பிறர் தங்கள் உள்ளங்கள் காதலுக் கடிமையாகாமல் ஊரார் விருப்பத்துக்கு அடிமையாகும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்களோ ஒளி பட்டதும் படாததும்படம்பிடித்துவிடும் நிழற் படத்தகடுகள்போல் காதல் என்றதுமே கனிந்துருகும் இளகிய உள்ளத்தினராய்ப் பண்பாடடைகின்றோம்.
சதாசிவன் உள்ளூர 'இத்தகைய நற்குடியின் காதல் கிடைக்கப் பெற்றதே' என மகிழ்ந்தான். அவன் பின்னும் 'காதலுடையவர் தம் மனத்திலுள்ள காதலைப் பற்றி வெளிப் படையாகப் பேசுவார்களா? பேசுவது தகுதியா?' என்று கேட்டான்.
ஆனந்தி: ஏனில்லை! காதலுணர்ச்சியினால் பறவைகள் பாடவில்லையா? அவற்றுக்குக் கட்டுப்பாடேது? காதலர் கவனிக்கவேண்டுவ தெல்லாம் காதலைப் பெறுபவர் அதற்குத் தகுதியானவர் தாமா என்பது மட்டுமே.
இறுதிவாசகம் அவள் நாவிலிருந்து வெளிவருகையில் அவள் கண்ணில் ஓர் ஒளியும் இதழில் ஒரு புன்னகையும் தவழ்ந்தன. அத்தகுதி தன்னிட மிருப்பதாக அவள் எண்ணுவது கண்டு அவன் இன்பத்தின் உச்சியேறியவன் போல் மயக்க மெய்தினான். அதில் கலந்துள்ள குறும்புக் குறிப்பு அவன் அறிவுக்கு எட்டவில்லை.