காதல் மயக்கம்
69
ஊருக்குள் வந்ததும் சதாசிவன் மெல்ல விலக எண்ணு பவன் போல் பாசாங்கு செய்தான். அவள் அது கண்டு இவ்வளவு தூரம் வந்தவர்கள் 'என் வீடுவரை என்னைக் கொண்டுவிட்டுச் செல்லப்படாதா?' என்றாள். அவள் வீட்டை யறிந்துகொள்ளும் எண்ணத்துடன் அவன் இணங்கினான். ஆனால் வீடுவந்ததும் அவள் சற்று உள்ளே வந்து இளைப்பாறிப்போக வற்புறுத்தி னாள். அவனால் அதைமீறக் கூடாமல் உட்சென்றான்.
அவ்வீட்டில் வேறு ஆள் நடமாட்டமேயில்லை. கிழவி யாகிய ஆனந்தியின் தாய் அவனை விருந்தினர்களை வர வேற்பதுபோல் இன்மொழிகளுடன் வரவேற்று முகமன் கூறினாள். அவனை அமரவைத்து அவனைப்பற்றிய விவர முழுதும் விடாது கூறும்படி பலவகை ஆதரவான கேள்விகள் கேட்டாள். ஆனந்தியின் காதலை விட்டாலும் அவள் உபசாரத்தை விட முடியாதது போல் அவனுக்குத் தோன்றியது.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதற் கிடையில் ஆனந்தி பால், பழம், சிற்றுண்டி ஆகியவற்றை எங்கிருந்தோ கொண்டு வந்தாள்.சதாசிவன் ஏனித்தனை உபசாரம். எனக்கு இதொன்றும் வேண்டாம். வீடுசெல்ல நேரமாயிற்று' -என்றான்.
6
கிழவி “எங்கள் வீடெல்லாம் வீடாகாதா? நாங்கள் ஏழைக ளென்றா நீங்கள் எங்கள் உபசாரத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்!” என்றாள். சதாசிவன் “அப்படியொன்றுமில்லை. உங்கள் அன்பே பெரிது” என்று கூறி ஆனந்தி கொண்டுவந்தவற்றில் சிறிது உட்கொண்டான். ஆனால் அதன் பின்னும் அவனை அவர்கள் எளிதாக வெளியேற விடவில்லை. அவன் விடைபெற்றுப் போகையில், ஆனந்தி “போகிறதுதான் போகிறீர்கள்; இன்னும் ஒரு சிறிய உதவி செய்துவிட்டுப் போங்கள். பக்கத்து அறையை என்னால் திறவுகோல் கொண்டு திறக்க முடியவில்லை சற்று திறந்து தருகிறீர்களா?" என்று கேட்டாள்.
சதாசிவன் சரி என்று சென்று திறந்தான். அதைத் திறப்பதில் ஒன்றும் தொந்தரவு இருந்ததாகக் காணவில்லை. படபடப்புடன் அவன் நேரே தன் வீட்டை நோக்கி நடந்தான்.
66
அவன் போகும்போது ஆனந்தி வாயிற் படியில் நின்று, "இனி உங்களை எப்போது காண்பது?" என்றாள். அவன் சற்றே