காதல் மயக்கம்
66
73
ஆனந்தி எதிர்பாராத வகையில் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தாவி, என் உள்ளத்தைத் திருடியது மட்டுமன்றித் திறவுகோலையுமா திருடினீர்கள்? திறவுகோலைத் தந்தது போதாது. உள்ளத்தையும் திருப்பித் தந்தாலன்றி விடேன்” என்றாள்.
அவள் இக்காட்சிக்குத் தன்னை முன் கூட்டிச் சித்தப் படுத்தியிருந்தாள் என்பது அவள் அணிமணி, பட்டாடை, நறுமணம் முதலியவற்றால் விளங்கின. சதாசிவன் அவள் பிடியில் ஐந்து நொடிகள்தான் தன்னை மறந்திருந்தான். அதற்குள் யசோதையின் சீறிய தோற்றம் அவன் மனக்கண்முன் தோன்றியது.
சதா: ஆனந்தி, இது என்ன விளையாட்டு! நான் மண மானவன். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தை என்பதை மறந்து விடாதே.
ஆனந்தி: நான் ஒன்றும் மறக்கவில்லை. வீட்டு வாழ்வின் கவலையைக் கொஞ்ச நேரம் மறந்திருங்கள். களவாடிய உள்ளத்தைத் திரும்பித் தந்தாலன்றி விடமாட்டேன்.
சதாசிவன் திமிற முயன்றும் அவள் கெட்டியாக அவனைப் பிடித்துக்கொண்டாள். தன் தவறான நிலைமையறிந்தும் அவன் அவள் மயக்கத்தில் சிறிது ஓய்ந்திருந்தான். அந் நிலையில் ஆனந்தியின் தாய் திடுமென உள்ளே வந்து அக்காட்சியை எதிர்பாராத குடும்ப மாது போல நடித்து "அட காதகா, நம்பிய மங்கையைப் பெண்டாளுவதா? இதோ உன்னை ஊர் சிரிக்க வைக்கிறேன். ஊருக்குப் பெரிய மனிதன். ஏழைப் பெண்களுக்கு எமனாவதா? செய்த காரியத்துக்குச் சரியான பரிகாரஞ் செய்தால் போயிற்று. இல்லாவிடில் பார்த்துக் கொள்வோம்” என்றாள்.
ஆனந்தி காதலுக்காகப் பரிவது போல் பாசாங்கு செய்து, "அவர் பேரில் குற்றமில்லையம்மா! என்னைப் போலவே அவரும் காதலுக்கு அடிமையாகிவிட்டார்” என்று கூறித் தாயை அனுப்பிவிட்டு, “அம்மா முன்கோபி, நீங்கள் வருந்த வேண்டாம். திறவு கோலை என்னிடம் தந்து விட்டுப் போங்கள்” என்றாள்.