உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம் - 25

சதாசிவன் 'ஆனந்தி' என்றதுமே அவள் "என்ன? ஆனந்தியா! சரி, சரி! நல்ல இடமாகத்தான் பார்த்து விட்டீர்கள். எத்தனை நாள் இந்தக்கபட நாடகமோ? ஐயோ! நான் இனி என்ன செய்வேன்?” என்று அழத் தொடங்கினாள். சதாசிவன் எவ்வளவு ஆறுதல் கூறியும் அவள் கேட்கவில்லை. “நீங்கள் நாடிய இடத்திற்கே நீங்கள் சென்று வாழுங்கள்... இனி நான் உங்கள் பக்கம் நாடுவதில்லை” என்று சீற்றத்துடன் கூறினாள்.

வெளியில் காதல் நாடிய அவனுக்கு வீட்டிலிருக்கும் காதலுக்கு மோசம் வந்தது. ‘அப்பு போன்ற நாடோடிகளுக்கு இத்தகைய இரண்டகமான நிலையில்லை. ஆணும் பெண்ணு மாகத் தாராளமாய்க் கலந்து கொள்ளும் உயர் குடிமக்களுக்கும் இத்தகைய இக்கட்டு வருவதற்கில்லை. நம்போன்று, தானுண்டு, தன் காரிய முண்டு என்றிருப்பவர்கள் இதிலெல்லாம் மாட்டிக்கொண் டிருக்கப்படாதுதான்' என்று அவன் நல்லறிவு கூறியது. ஆனாலும் மாட்டிக்கொண்ட பின் நயமாகத்தான் பின்வாங்கவேண்டும். நாளைத் திறவுகோலைக் கொடுத்துவிட்டு இனி எங்குமே போகவேண்டாம். ஆனால் இவ்வுறுதி வெற்றி பெற வேண்டுமே? யசோதையிடம் ஒளித்து நடந்ததால் இவ்வளவு தொல்லை வந்துவிட்டது. இனி அவள் என்ன நினைத்தாலும் சரி, அவளிடம் மனந் திறந்து செய்யப்போவதைச் சொல்லித் துணிந்து செய்வது என்று முடிவு கட்டினான்.

அதன்படி மறுநாள் காலையில் சதாசிவன் யசோதையிடம் “நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். இதோ இந்த ஒரு தடவை திறவுகோலைக் கொண்டு கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன். இனி அப்பக்கம் நாடப்போவதில்லை” என்றான்.

அவள் முகத்தில் முழுநம்பிக்கை தோன்றவில்லை. ஆனால் கலவரமுமில்லை. “உங்கள் விருப்பம்” என்றாள்.

ஆனந்தி வீட்டில் திறவுகோலைத் தேடிக்கொண்டிருப்ப தாகப் பாசாங்கு செய்தாள். சதாசிவன் அவளிடம் போய் “என்ன தேடுகிறாய்?” என்றான்.

ஆனந்தி: எங்கள் அரங்குத் திறவுகோலை.

சதா: அது இதோ இருக்கிறது.