காதல் மயக்கம்
71
சதாசிவன் இவள் இக்கேள்வி கேட்பாள் என்று முன் கூட்டி எண்ணியிருக்கவில்லை. ஆகவே மேலீடாக நினைவுக்கு வந்தபெயரைச் சொல்ல எண்ணி "நம் இராமலிங்கத்துடன் தான் பேசிக் கொண்டிருந்தேன்” என்றான்.
யசோதைத் தன் மூத்தபையனைப் பார்த்து, "இராம லிங்கத்திடம் போய், அப்பா அங்கே இன்று வந்திருந்தாரா என்று கேட்டுவா” என்றாள்.
அவள் தன் சொல்லை நம்பவில்லை என்று கண்டு, அவளாகக் கண்டுபிடிக்குமுன் நாமாக உண்மையைச் சொல்லிவிடுவோம். என்றெண்ணி அவன் "இந்தச் சிறிய செய்திக்கு இப்படி வழக்கு விசாரணை செய்வாய் என்று நான் எண்ணவில்லை. நான் இராமலிங்கத்திடம் ஒன்றும் பேசிக் கொண்டிருக்கவில்லை. உன்னிடம் பொய்தான் சொன்னேன்' என்று கூறினான்.
>>
யசோதா : நீங்கள் கூறுவது பொய்யென்று எனக்குத்தான் முன்னமே தெரியுமே? சரி, அப்புறம் வேறு யாருடன்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள்?
சதாசிவன்: அதையெல்லாம் நீ ஏன் கேட்க வேண்டும்? என் மனம் போல் நான் யாருடனாவது பேசக்கூடப் படாதா?
"பேசக்கூடாதென்று யாரும் சொல்லவில்லை. அதற்கு இவ்வளவு மறைப்பு எதற்கு என்றுதான் புரியவில்லை. எனக்கு என்னவோ ஒன்றும் பிடித்துக் காணவில்லை? போகட்டும் என்று கூறிக்கொண்டே யசோதை அவன் உடுப்பைக் கழற்றி ஆணியில் மாட்டினாள். அச்சமயம் அதில் சத்தம் கேட்கவே, அவள் பையில் கைவிட்டு அதிலிருந்த திறவுகோலை எடுத்து “இது ஏது திறவுகோல்? இதில் இருக்கிறதே கதை” என்றாள்.
திறவுகோலைக் கண்டதுமே சதாசிவன் "ஐயையோ, இதை மறந்துபோய்க் கொண்டு வந்துவிட்டேனே; திறவு கோல் காணாமல் எங்கே தேடுகிறார்களோ தெரியவில்லை. இங்கும் இனி உண்மையைக் கூறாமல் வழியில்லை" என்று நடந்ததை யெல்லாம் கூறினான்.
யசோதை: யார் அத்தகைய பெண்? இதுவும் கட்டுக் கதையா? அந்தப் பெண் பெயர் என்ன?